பாகிஸ்தான் திடீர் முடிவு.. பணக்காரர்கள் மீது அதிக வரி, கார் வாங்க தடை..!

பாகிஸ்தான் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்றால் அமெரிக்கா டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 200-ஐ தாண்டியது.

எரிபொருள் இல்லாமல் பல மின்சார உற்பத்தி நிலையைத்தை மூடப்பட்டு இருந்தது, வருமானம் இல்லாத அரசு மின்சாரக் கட்டணத்தையும், பெட்ரோல் டீசல் விலையைத் தாறுமாறாக அதிகரித்தது. கிட்டதட்ட ஐஎம்எப், உலக வங்கி, வெளிநாடுகளின் கடன் இல்லை என்றால் ஒரு வருடம் கூட தாக்குபிடிக்க முடியாத நிலையில் தான் உள்ளது.

இந்த நிலை வரி வருமானத்தை அதிகரிக்கப் பாகிஸ்தான் அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

மிஃப்தா இஸ்மாயில்

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) நிதியுதவியைப் பெற வேண்டும் என்பதற்காகப் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு பணக்காரர்கள் மீதான வரிகளை உயர்த்தி, புதிய கார்கள் வாங்குவதைத் தடை செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

 10 பில்லியன் டாலர்

10 பில்லியன் டாலர்

220 மில்லியன் மக்களைக் கொண்ட பாகிஸ்தான் 10 பில்லியன் டாலர்களுக்கு குறைவான அன்னிய செலாவணி கையிருப்பை வைத்துள்ளது. இந்த தொகை 45 நாட்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட போதாது என்பது தான் பாகிஸ்தானின் நிலை.

சிக்கல்
 

சிக்கல்

இதோடு பாகிஸ்தான் நாட்டின் நடப்புக் கணக்கு விரிவடைந்து வருவதாலும், நிதிப் பற்றாக்குறைகள் அதிகரித்து வருவதாலும் வாங்கிய கடனுக்கும், செலுத்த வேண்டிய பேமெண்ட்-களை அளிக்க முடியாத நிலையில் சிக்கிக்கொண்டு உள்ளது.

வரி, வாகனம்

வரி, வாகனம்

ஜூலையில் தொடங்கும் 2022/23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்ட இஸ்மாயில், பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்துவது, கார்கள் இறக்குமதி மற்றும் அரசு அதிகாரிகள் புதிய வாகனங்கள் வாங்குவதைத் தடை செய்வது என்று கூறினார்.

சீனாவின் நிதியுதவி

சீனாவின் நிதியுதவி

பாகிஸ்தான் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறையால் தவித்து வருவதற்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் சுமார் 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியைக் கடனான வழங்கச் சீன வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன.

சீனா மீது வரி

சீனா மீது வரி

சீனா பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கடன் கொடுத்துள்ள நிலையில் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில் இப்போது கொடுத்துள்ள கடன் பெரிய அளவில் உதவும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் மீது 10 சதவீத ஒழுங்குமுறை வரியைப் பாகிஸ்தான் விதித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pakistan raise taxes on rich people, ban to buying car

Pakistan raise taxes on rich people, ban to buying car Pakistan raise taxes on rich people, ban to buying car பாகிஸ்தான் திடீர் முடிவு.. பணக்காரர்கள் மீது அதிக வரி, கார் வாங்க தடை..!

Story first published: Friday, June 10, 2022, 22:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.