காஷ்மீர் கோவில்கள் குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு| Dinamalar

சென்னை; காஷ்மீரின் பெருமைகளை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இன்று இரவு, ‘காஷ்மீர் கோவில்கள் சுற்றுப்பயணம் குறித்த தொல்லியல் அறிஞர் நாகசாமியின் சேகரிப்பு’ எனும் தலைப்பில், டாக்டர் கலா நாகசாமி சொற்பொழிவு ஆற்றுகிறார்.

காஞ்சி மடத்தின் சார்பில் நடக்கும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, ஒவ்வொரு சனிக்கிழமையும், மாத்யம தர்ம சமாஜத்தின், ‘யு -டியூப்’ சேனலில் ஒளிபரப்பாகிறது. இன்று இரவு 7:00 மணிக்கு, 43வது விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, ‘காஷ்மீர் கோவில்கள் சுற்றுப்பயணம் குறித்த தொல்லியல் அறிஞர் நாகசாமியின் சேகரிப்பு’ எனும் தலைப்பில், நாகசாமியின் மகளும், சென்னை பல்கலை முன்னாள் உதவித் பேராசிரியருமான டாக்டர் கலா நாகசாமி சொற்பொழிவு ஆற்றுகிறார்.

latest tamil news

இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், www.youtube.com /channel/UC—cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் kamakoti.tv, Kanchi Kamakoti Facebook, Kanchi Kamakoti YouTube, KanchiMutt Twitter வாயிலாகவும் பார்க்க முடியும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.