அமுதாவும்… அன்னலட்சுமியும்… : ஜீ தமிழில் புது சீரியல் – என்ன கதை தெரியுமா?

அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற புதிய சீரியல் வெகு விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் கண்மணி மனோகர் நாயகியாக அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, அருண் பத்மநாபன் என்பவர் நாயகனாக செந்தில் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில் அம்மாவாக அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கருத்தம்மா ராஜஸ்ரீ.

இந்த சீரியல் குறித்து வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் சிறுவயதிலே அம்மாவை இழந்த அமுதா தன் குடும்பத்திற்காக படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்கிறார். படிப்பறிவு இல்லாத காரணத்தால் பல அவமானங்களை சந்திக்கும் அமுதா கட்டினா ஒரு வாத்தியாரை தான் கல்யாணம் கண்டிக்கணும் என முடிவு செய்கிறார். இவரை போலவே இன்னொருத்தரும் இன்னொரு கணவோடு காத்திருக்கிறார். அவர் யாருனு தெரிஞ்சிக்க நாமும் காத்திருக்கலாம் என டுவிஸ்ட்டோடு வெளியானது.

இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் இந்த டுவிஸ்ட்டுக்கு பதில் கிடைத்துள்ளது. வாத்தியார் குடும்பம் என பெருமையாக வாழ்ந்த அன்னலட்சுமி குடும்பத்தில் எதிர்பாராத சூழ்நிலைகளால் சரிந்து போகிறது. இதனால் தன்னுடைய மகனை வாத்தியாராக்கி குடும்ப பெருமையை மீட்டெடுக்க ஆசைப்படுகிறார். செந்தில் தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக வேலை செய்கிறார். இப்படி மற்றவர்கள் கனவுக்காக மனசுல இருக்க வலிகளை மறைச்சு தானே ஆகணும் ஆனால் எவ்வளவு நாளைக்கு என இந்த ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது.

செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்ளும் அமுதா, மகனை வாத்தியார் என நினைத்து பெருமைப்படும் அன்னலட்சுமி என இருக்கும் போது உண்மை தெரிந்தால் என்னவாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சீரியல் மீதான எதிர்பார்ப்புகளை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.