கண்டும் காணாமல் இருக்கும் காவல்துறையால் வெள்ளாற்றில் தொடரும் மணல் கடத்தல்

திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை என் றும், பெரிய அளவில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது பெயரின்றி வழக்குப்பதிவு செய்வ தாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் இரவில், மாட்டு வண்டிகளிலும், இரு சக்கர வாகனங்களிலும், லாரிகளிலும் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம்இரவு எடைச்செருவாய் பகுதியில் வெள்ளாற்றில் பொக்லைன் இயந் திரம் மூலம் லாரியில் மணல் கடத்தப்படுவதாக திட்டக்குடி போலீஸா ருக்குத் தகவல் கிடைத்தது. இதைடுத்து ஆய்வாளர் அன்னக் கொடி தலைமையிலான போலீ ஸார் அங்கு சென்றபோது, மணல்கடத்தலில் ஈடுபட்டோர் வாகனங்களை விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடிய நிலையில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு டிப்பர் லாரிகள், பொக்லைன் இயந்திரம், ஒரு டிராக்டர் மற்றும் ஒரு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல்செய்து, அடையாளம் தெரியாத 5 பேர் இச்ம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரில் காவல்

“எங்கள் பகுதியில் ஆற்று மணலை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஆற்றுக்குச் செல் லும் வழியில் இரு கார்களை நிறுத்திவைத்து, வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் எவரேனும் வருகின்றனரா என நோட்டமிட்டு, எவரேனும் வருவது தெரிந்தால், செல்போன் வாயிலாக மணல் அள்ளுவோருக்கு தகவல் தெரிவித்து, தப்பித்துச் செல்ல வழி வகை செய்து விடுகின்றனர்” என்கின்றனர் எடைச்செருவாய் கிராம மக்கள்.

வெள்ளாற்றில் அவ்வப்போது மாட்டு வண்டிகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் மணல் கடத்துபவரை பிடித்து கைதுசெய்து சிறையில் அடைக்கும் திட்டக்குடி போலீஸார், லாரிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபடுவோரை அடையாளம் தெரியாத நபர் என வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் தொடர்புடையோர் முன் ஜாமீன் எடுக்க வசதியாக மறைமுக உதவி செய்கின்றனர் என்றும் கிராம மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த சிபிஎம் வட்டச் செயலாளர் அசோகன் கூறுகையில், “தற்போது (நேற்று முன்தினம்) மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது, மணல்கடத்தல் வழக்குப்பதிவு செய்யாமல் கிராவல் மண் கடத்தல் வழக்காக பதிவு செய்யும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மணல் கடத்தலில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரின் உறவினர் ஒருவர் ஈடுபட்டிருப்பதால், அவரை காப்பாற்றுவதன் முகமாக, வழக்குப்பதிவு செய்வதில் காவல்துறையினர் மெத்தனப் போக்கோடு செயல்படுவதாக, ஆய்வாளரின் போக்கை பிடிக்காத சில காவலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஆய்வாளர் அன்னக்கொடியிடம் கேட்டபோது, “மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். நபர்கள் தப்பியோடியதால், அவர்களின் வாகனப் பதிவெண்ணைக் கொண்டு, அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். அதேநேரத்தில் அவர்கள் முன்ஜாமீன் பெற்றுவிட்டால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. வழக்கில் பாரபட்சத்திற்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.