அதானிக்காக மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறிய இலங்கை அதிகாரி பதவி விலகல்

தொழிலதிபர் அதானிக்கு மின் திட்டத்தை வழங்குமாறு இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக் கூறிய இலங்கை உயர் அதிகாரி பதவி விலகினார்.

இலங்கை மின்சார வாரியத் தலைமை அதிகாரியான எம்.எம்.சி ஃபெர்டினாண்டோ, தொழிலதிபர் அதானிக்கு மின் திட்டத்தை வழங்குமாறு இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக் கூறியதை விரைவாக திரும்பப் பெற்றார். இருப்பினும், அவருடைய பேசு இலங்கையில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இலங்கையில் மோடியின் நண்பர்கள் பின்வாசல் வழியாக வருவதற்கு ராஜபக்சே உதவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது.

பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தம் காரணமாக அதானி குழுமத்திற்கு 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை வழங்குமாறு இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தன்னிடம் கேட்டதாகக் கூறிய இலங்கையின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை பதவி விலகினார்.

இலங்கை மின்சார வாரியத்திற்கு தலைமை வகித்த எம்.எம்.சி ஃபெர்டினாண்டோ தனது கருத்தை வேகமாக வாபஸ் பெற்றார். ஆனாலும், அவர் கூறியது இலங்கை அரசியலில் சர்ச்சையை உருவாக்கியது. இலஞ்கையில் மோடியின் நண்பர்கள் பின்வாசல் வழியாக வருவதற்கு ராஜபக்சே உதவுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தது.

ஃபெர்டினாண்டோ பதவி விலகியதாக அறிவித்து, இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர திங்கள்கிழமை பிற்பகல் ட்வீட் செய்தார். அதில், “இலங்கையின் மின்சார வாரியத் தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ எனக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தை நான் ஏற்றுக்கொண்டேன். இலங்கை மின்சார வாரியத்தின் புதிய தலைவராக துணை தலைவர் நலிந்த இளங்கோகோன் பதவியேற்கவுள்ளார்.
என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு மன்னார் மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு ராஜபக்சே கேட்டுக் கொண்டதாக வெள்ளிக்கிழமை நாடாளுமன்றக் குழுவிடம் ஃபெர்டினாண்டோ தெரிவித்திருந்தார்.

பொது நிறுவனங்களுக்கான கமிட்டியில் பேசிய ஃபெர்டினாண்டோ, “மோடியின் அழுத்தத்தில் இருப்பதாக ராஜபக்சே என்னிடம் கூறியதாக” கூறியிருந்தார். மேலும், இந்த திட்டத்தை அதானிக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு இலங்கை மின்சார வாரியத்திற்கு கோரப்படாத முன்மொழிவுகளை வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மன்னாரில் காற்றாலை மின் திட்டம் வழங்குவது தொடர்பாக பொது நிறுவனங்களுக்கான குழுவின் விசாரணையில் இலங்கை மின்சார வாரியத் தலைவர் தெரிவித்த கருத்து குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திற்கு இந்த திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இந்த விஷயத்தில் பொறுப்பான தகவல் தொடர்பு தொடரும் என்று நம்புகிறேன் என்று கோட்டபய ராஜபக்சே தெரிவித்தார்.

கோட்டபய ராஜபக்சே முதலில் ட்விட்டரில் வேகமாக ஒரு மறுப்பை வெளியிட்டார். அதில், அவர் கூறியதாவது: “மன்னாரில் காற்றாலை மின் திட்டம் வழங்கப்படுவது குறித்து, எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் இந்த திட்டத்தை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கியதாகக் கூறப்படுவதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இந்த விஷயத்தில் பொறுப்பான தகவல் தொடர்பு தொடரும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

இருப்பினும், அடுத்த நாள், ஃபெர்டினாண்டோ தான் கூறியதை வாபஸ் பெற்றார். மேலும், தான் உணர்ச்சிவசப் பட்டுவிட்டதாகக் கூறினார்.

ராஜபக்சே முதலில் இந்த செயல்பாட்டில் தலையிட்டதை மறுத்து ட்வீட் செய்தார். பின்னர், வெளியிட்ட ஒரு நீண்ட அறிக்கையில், இந்த திட்டத்தை வழங்குவதில் யாரும் தலையிடவில்லை, மன்னாரில் எந்தவொரு நபருக்கும் அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கும் மின் திட்டம் அழுத்தம் காரணமாக ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

கடந்த ஆண்டு முதல், தீவு நாடான இலங்கையில், அதானி குழுமம் பெற்ற மூன்றாவது பெரிய திட்டமாகும். இது கொழும்பு துறைமுகத்தின் ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு முனையத்தை 51 சதவீத பங்குகளுடன் அபிவிருத்தி செய்து இயக்குவதற்கான ஒப்பந்தத்தை வென்றது. மார்ச் மாதம் இரண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதில் ஒன்று மன்னாரிலும் மற்றொன்று இலங்கையின் வடக்குப் பகுதியில் பூனேரியிலும் அமைகிறது.

இலங்கை நிதி மற்றும் அரசியல் நெருக்கடியில் உள்ளது. ராஜபக்ச அரசாங்கம் மோடியின் நண்பர்களை நாட்டிற்குள் பின்வாசல் வழியாக நுழைய அனுமதிக்க உதவி செய்வதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மே மாதம், கோட்டபயாவின் சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகச் செய்து, பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டதற்காக ஆளும் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. எனினும், கோட்டாபய, பதவி விலக மறுத்து தனது சகோதரருக்குப் பதிலாக முன்னாள் போட்டியாளரான ரணில் விக்கிரமசிங்கவைக் பிரதமராகக் கொண்டு வந்தார். நாட்டில் 1 மில்லியன் டாலர் வெளிநாட்டு கையிருப்பு இருப்பதாகவும், அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட அரசாங்கத்தால் பணம் செலுத்த முடியவில்லை என்றும், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புதிய பிரதமர் குறிப்பிட்டார்.

ஜனவரி முதல் தெற்கே உள்ள அண்டை நாடான இலங்கைக்கு கடன் மூலம் பணப் பரிமாற்றங்கள் மற்றும் பிற வழிமுறைகள் மூலம் இந்தியா 3 பில்லியன் டாலர் உதவியை வழங்கியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.