புழல் அருகே அரசு பள்ளியில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: திருவள்ளூர் மாவட்டம்  செங்குன்றம் அருகே புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட மாடல் என்று கூறியதுடன்,  2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பிழையின்றி எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ள இந்த திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வந்ததால், மாணாக்கர்கள், எழுத படிக்க திணறி வந்தனர். இதைடுத்து,  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் 1, 2, 3ஆம் வகுப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. இதற்காக  மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது. இதற்காக அரசுமற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மை செயலாளர் காகர்லா உஷா, கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்பு *கற்றல் கற்பித்தல் உபகரணங்களையும், ஆசிரியர் கையேடுகள் மற்றும் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற ஒவையார் பாடலை மேற்கோள் காட்டி உரையாற்றிய  வழக்கமான படிப்பை தாண்டி புதிய உத்திகளை கையாண்டு கற்றலை மேம்படுத்த எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும்,தொடக்க கல்வி என்பது சமூகத்தின் திறவுகோல் என்றும் முதல்வர் கூறினார்.
தொடர்ந்து பேசியவர், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன, அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம்  என்றும், 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவு பெற வேண்டும் என்பதே  அரசின் கொள்கை என்று கூறிய முதல்வர் 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பிழையின்றி எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1முதல் 3ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
எண்ணும் எழுத்தும் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் ஏற்றமடையும் என நம்பிக்கை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ஆசிரியர்களின் கருத்து கேட்கப்பட்டு எண்ணும் எழுத்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டு எளிமையான வகையில் பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.