காதல் வளர்ந்த பிறகு கண்பார்வையற்றவள் என்ற உண்மையை கூறிய பெண்! இளைஞர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு


இந்தியாவில் கண் பார்வையை இழந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தின் நெகிழவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுஜாதா. இளம்பெண்ணான இவர் பட்டப்படிப்பு படிக்கும் போது மேட்ரிமோனியல் திருமண தகவல் தளத்தில் திருமணத்திற்காக தனது பெயர், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்திருந்தார்.

இதன்பின்னர் சுஜாதாவுக்கு கண்பார்வை பறிபோனது. இந்த நிலையில் அவரின் விபரங்களை மேட்ரிமோனியல் இணையதளத்தில் பார்த்த மன்மோகன் என்ற இளைஞர் சுஜாதாவை தொடர்ப்பு கொண்டு பேசினார்.
பின்னர் தான் ஒரு கட்டத்தில் தான் பார்வையில்லாதவள் என்பதை மன்மோகனிடம் கூறினார் சுஜாதா.
இருந்த போதிலும் அவரை மணக்க முடிவு செய்தார் மன்மோகன், இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் வளர்ந்த பிறகு கண்பார்வையற்றவள் என்ற உண்மையை கூறிய பெண்! இளைஞர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு

otv

சுஜாதா கூறுகையில், மன்மோகன் தான் முதலில் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து எனது பார்வை இழப்பு பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டேன். ஆச்சரியமாக, அவர் என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்பு கொண்டார், தற்போது மண வாழ்வில் இணைந்துள்ளோம் என கூறியுள்ளார்.

மணமகன் மன்மோகன் கூறுகையில், நான் அவளைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தபோது, ​​சுஜாதா தன் நிலையை பற்றி எல்லாவற்றையும் தெளிவாகச் சொன்னாள்.
சற்றும் யோசிக்காமல் சுஜாதாவை திருமணம் செய்துகொள்ளலாம் என்று மனதில் தோன்றியது என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.