நீங்கள் ஒரு அரசு ஊழியரா? கோடக் மஹிந்திரா வங்கி உங்களுக்கு தரும் செம சலுகை!

நீங்கள் ஒரு மத்திய அரசு அல்லது மாநில அரசு ஊழியர் என்றால் கோடக் மஹிந்திரா வங்கி செம சலுகை ஒன்றை உங்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சலுகை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

ஏற்கனவே மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் கோடக் மஹிந்திரா வங்கி தற்போது மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இலவச சேலரி கணக்கை தொடங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

கோடக் நேஷன் பில்டர்ஸ் என்ற சம்பள கணக்கு மத்திய மற்றும் மாநில அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் இது முழு அளவிலான சேவை நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. கோடக் மகேந்திராவில் எவ்வளவு வட்டி?

சேலரி கணக்கு

சேலரி கணக்கு

இந்த சேலரி கணக்கில் வாழ்நாள் முழுவதும் ஜீரோ பேலன்ஸ் வைத்துக்கொள்ளும் வசதி உண்டு என்றும் அதேபோல் சேவை கட்டணம் இல்லாத லாக்கர் வசதி, மாதம் இரண்டு லட்ச ரூபாய் வரை இலவச ரொக்க வைப்பு மற்றும் ஒரு மாதத்திற்கு 30 இலவச பரிவர்த்தனை ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கோடக் தெரிவித்துள்ளது.

ரூபே டெபிட் கார்டு

ரூபே டெபிட் கார்டு

மேலும் ஊழியர்களுக்கு இலவசமாக ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச ஆட்-ஆன் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

விபத்து காப்பீடு
 

விபத்து காப்பீடு

மேலும் இந்த கணக்கில் 50 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீடு திட்டமும் அடங்கும் என்பது இந்த காப்பீட்டில் சாலை, ரயில் விபத்து காரணமாக நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 30 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சலுகை

சலுகை

இதுகுறித்து கோடக் மஹிந்திரா வங்கியின் குழுமத் தலைவர் விராட் திவான்ஜி கூறியபோது கோடாக் நேஷனல் பில்டர் சம்பள கணக்கு நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்றும் அவர்களை பாராட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கேஷ்பேக் வசதி

கேஷ்பேக் வசதி

இந்த நிலையில் இந்த சேலரி கணக்கில் சேரும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டில் 5 சதவீதம் வரை கேஷ்பேக் வசதி மற்றும் ஒருசில இந்திய பிராண்டுகள் தரும் சலுகைகள் வழங்கப்படும் என்றும் விராட் திவான்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் கல்வி காப்பீடு

குழந்தைகள் கல்வி காப்பீடு

இதுகுறித்து நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி பிரவீனா ராய் கூறும்போது, ‘இந்த திட்டத்தில் காப்பீட்டு தொகை மற்றும் குழந்தைகளுக்கான கல்வி காப்பீடு உள்ளிட்ட சில நன்மைகள் இருப்பதாகவும் இவை அரசு ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேலரி கணக்கு அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kotak Mahindra Bank launches Kotak Nation Builders Salary Account

Kotak Mahindra Bank launches Kotak Nation Builders Salary Account | நீங்கள் ஒரு அரசு ஊழியரா? கோடக் மஹிந்திரா வங்கி உங்களுக்கு தரும் செம சலுகை!

Story first published: Tuesday, June 14, 2022, 7:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.