சென்னை:
வீட்ல
விசேஷம்
படம்
தங்களுக்கு
லாபகரமான
படம்
தான்
என
ப்ளூ
சட்டை
மாறனுக்கு
சரியான
பதிலடி
கொடுத்துள்ளார்
ஆர்ஜே
பாலாஜி.
மேலும்,
நடிகர்
விஜய்க்கு
கதை
சொல்ல
தனக்கு
இந்த
ஆண்டு
வாய்ப்பு
கிடைத்த
சுவாரஸ்ய
அனுபவத்தையும்
பகிர்ந்துள்ளார்.
நடிகர்
விஜய்க்காக
ஒரு
பான்
இந்தியா
படத்தின்
ஒன்லைனை
ஆர்ஜே
பாலாஜி
சொல்லி
இருப்பதாகவும்
கூறியுள்ளார்.
ஹீரோவாகவும்
இயக்குநராகவும்
ஆர்ஜேவாக
ரேடியோவில்
கலக்கி
வந்த
பாலாஜி
தற்போது
தமிழ்
சினிமாவில்
ஹீரோவாகவும்,
இயக்குநராகவும்
அசத்தி
வருகிறார்.
எல்.கே.ஜி,
மூக்குத்தி
அம்மன்
படங்களை
தொடர்ந்து
ஆர்ஜே
பாலாஜியின்
சமீபத்திய
ரிலீஸான
வீட்ல
விசேஷம்
படமும்
மக்கள்
மத்தியில்
நல்ல
வரவேற்பை
பெற்றுள்ளது.
பாலிவுட்டில்
ஆயுஷ்மான்
குரானா
நடிப்பில்
வெளியான
பதாய்
ஹோ
படத்தின்
அதிகாரப்பூர்வ
ரீமேக்
தான்
இந்த
படம்
என்றாலும்,
தமிழ்
ரசிகர்களின்
பல்ஸை
பிடித்து
அதற்கான
திரைக்கதையை
அமைத்த
இடத்தில்
தான்
பாலாஜி
வெற்றிப்
பெற்றுள்ளார்.

5
மாசம்
ஆச்சு
ரீமேக்
படம்
என்றாலும்,
படத்தை
போட்டு
விட்டு
உடனடியாக
ஒரு
வாரத்திலோ
அல்லது
ஒரு
சில
இயக்குநர்கள்
போல
3
மாதத்திலோ
ஆர்ஜே
பாலாஜி
வீட்ல
விசேஷம்
படத்தின்
கதையை
எழுதி
முடிக்கவில்லையாம்.
அதற்காகவே
5
மாதங்களை
செலவு
செய்து
எந்த
இடத்திலும்
ரசிகர்கள்
லேகாக
ஃபீல்
பண்ணக்
கூடாது
என்றும்
விரசமாக
மாறிவிடக்
கூடாது
என்பதிலும்
உழைத்துள்ளதாக
கூறியுள்ளார்.

விஜய்க்கு
பான்
இந்தியா
கதை
கடந்த
ஜனவரி
மாதம்
நடிகர்
விஜய்க்கு
கதை
சொல்லும்
வாய்ப்பு
ஆர்ஜே
பாலாஜிக்கு
கிடைத்ததாம்.
உடனடியாக
விஜய்க்காக
ஒரு
பான்
இந்தியா
கதையை
ஆர்ஜே
பாலாஜி
ஒன்
லைனையே
40
நிமிஷம்
நரேட்
செய்துள்ளாராம்.
இந்த
கதை
ரொம்ப
பெருசா
இருக்கே
ரெடியாக
எவ்ளோ
நாள்
எடுக்கும்
என
ஆர்ஜே
பாலாஜியிடம்
விஜய்
கேட்க,
குறைந்தபட்சம்
ஓராண்டாகும்னு
செம
கூலாக
சொல்லி
விட்டதாக
ஆர்ஜே
பாலாஜி
பேசியுள்ள
வீடியோ
டிரெண்டாகி
வருகிறது.

மூக்குத்தி
அம்மன்
ஸ்டைலில்
ஆர்ஜே
பாலாஜியின்
மூக்குத்தி
அம்மன்
படம்
மிகவும்
பிடித்துப்
போய்
தான்
அவரிடம்
கதை
சொல்ல
சான்ஸ்
கொடுத்திருக்கிறார்
நடிகர்
விஜய்.
ஆர்ஜே
பாலாஜி
சொன்ன
பான்
இந்தியா
கதையை
கேட்டு
விட்டு,
மூக்குத்தி
அம்மன்
ஸ்டைலில்
காமெடியாகவும்,
கருத்தாகவும்
ஒரு
படம்
ரெடி
பண்ணுங்க,
எப்போ
ரெடியானாலும்
சொல்லுங்க
பண்ணுவோம்னு
சொல்லி
உள்ளார்
என்றும்
ஆர்ஜே
பாலாஜி
கூறியுள்ளார்.

தளபதி
77
அல்லது
87
நல்ல
திரைக்கதையை
உருவாக்க
கால
தாமதம்
ஆகும்
என்றும்
இப்போ
இல்லைன்னாலும்,
தளபதி
77
அல்லது
87
கூட
உங்க
கூட
பண்ண
நான்
ரெடி
என
நடிகர்
விஜய்யிடம்
ஆர்ஜே
பாலாஜி
செம
காமெடியாக
பேசிய
மறக்க
முடியாத
நினைவுகளையும்
பகிர்ந்துள்ளார்.
விரைவில்
ஆர்ஜே
பாலாஜி
இயக்கத்தில்
விஜய்
நடிக்கும்
படம்
உருவாகும்
என்றும்
எதிர்பார்க்கலாம்
என
ரசிகர்கள்
ஆர்ஜே
பாலாஜியை
வாழ்த்தி
வருகின்றனர்.