டாப் 100ல் டெல்லி, பெங்களூரு, மும்பை.. என்ன விஷயம்.. ஏன்?

சர்வதேச அளவில் 2022ல் உலகத்தரம் வாய்ந்த 100 சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடட்ராக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த சிறந்த 100 விமான நிறுவனங்களின் பட்டியலில் 3 இந்திய விமான நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.

709 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 30ல் 3 நிறுவனம் மட்டுமே உயர்வு..!

இதில் இந்தியாவினை சேர்ந்த டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமும், பெங்களூரைச் சேர்ந்த கெம்பேகவுடா விமான நிலையம், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் இடம் பெற்றுள்ளன.

டாப் 100ல் 3 இந்திய விமான நிலையங்கள்

டாப் 100ல் 3 இந்திய விமான நிலையங்கள்

இதில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 37வது இடத்திலும், பெங்களூரைச் சேர்ந்த கெம்பேகவுடா விமான நிலையம் 61வது இடத்திலும், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் 65வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. இது தவிர வேறு எந்த இந்திய விமான நிலையங்களும் இடம்பெறவிலை.

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

கடந்த ஜூன் 15 அன்று பிரான்சின் பாரிஸில் உள்ள பயணிகள் டெர்மினல் எல்ஸ்போவில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மேலும் இது உலகளவில் 500-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை உள்ளடக்கியது. இது விமான நிலையத் துறைக்கான மிகவும் மதிப்புமிக்க தர விருதுகளில் ஒன்றாகும்.

இந்த விழாவில் உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், தலைவ்ஸ்ர்கள் மற்றும் மூத்த நிர்வாகத்தினர் கலந்து கொள்கின்றனர்.

சிறந்த விமான நிலையம்
 

சிறந்த விமான நிலையம்

ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருதுகளில் தொடர்ந்து 4வது ஆண்டாக, டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இடம் பெற்றுள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக சிறந்த விமான நிலையமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விமான நிலையம் கடந்த ஆண்டு 45வது இடத்தில் இருந்த நிலையில், தற்பொது 37வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது உலகின் சிறந்த 50 விமான நிலையத்திற்குள் டெல்லி இடம்பெற்றுள்ளது. இது தெற்காசியாவில் மிக தூய்மையான விமான நிலையமாகவும் உள்ளது.

முன்னேற்றம் தான்

முன்னேற்றம் தான்

இதில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையைம் 71வது இடத்தில் இருந்து 61வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது. இதேபோல மறுபுறம் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் 65வது இடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தெற்கு ஆசியாவில் உள்ள சிறந்த 10 விமான நிலையங்களின் முதல் 10 பட்டியலில் 8 விமான நிலையங்கள் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Delhi, bengaluru, mumbai international airports among top 100 best airports globally: skytrax

Skytrax has released a list of the top 100 best airports in the world by 2022 internationally. 3 Indian Airports are in the list of Top 100 Airlines.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.