அந்த ரோலுக்கும் வேணான்னு துரத்தி அடிச்சிட்டாங்களாம்.. ஓவர் புலம்பலில் சூப்பர் மாடல்!

சென்னை: தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொண்டு வாய்க்கு வந்ததை கண்டபடி பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட அந்த துணை நடிகை சமீபத்தில் பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன் என்றெல்லாம் அழுது புலம்பினார்.

அவரது அழுகையை பார்த்து ஆதரவு கொடுக்க நினைத்த ஒரு வெப்சீரிஸ் டைரக்டர் அந்த சூப்பர் மாடலுக்கு ஆபாசமான ரோலில் நடிக்கும் வாய்ப்பை வழங்குவதாக உறுதி அளித்ததும் உடனடியாக ஓகே சொல்லி சூட்டிங்கிற்கு போயிருக்கிறாராம்.

ஆனால், அந்த வெப்சீரிஸில் கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் அவருக்கு அந்த பிட்டு பட வாய்ப்பும் பறி போய் விட்டதாக சில சீக்ரெட்டான தகவல்கள் கசிந்துள்ளன.

சூப்பர் மாடல்

தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொண்டு சமூக வலைதளங்களில் காட்டக் கூடாததை எல்லாம் காட்டியபடி போஸ் கொடுத்து டிரெண்டானார் அந்த துணை நடிகை. சர்ச்சைக்கு பெயர் போனவராக இருக்கிறாரே நாமும் அவரை வைத்து கொஞ்சம் டிஆர்பியை ஏற்றிக் கொள்வோம் என நினைத்து அந்த பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவில் அவரை தெரியாத்தனமாக சேர்த்து விட்டனர். அங்கேயும் பெரிய பிரச்சனையை பண்ணி வெளியேறினார்.

என்ன பார்த்து காப்பி அடிக்கிறாங்க

என்ன பார்த்து காப்பி அடிக்கிறாங்க

முன்னணி நடிகைகள் எல்லாரும் தன்னை பார்த்து காப்பி அடிக்கிறாங்க என கோலிவுட் நடிகைகளை மட்டுமின்றி பாலிவுட் நடிகைகள் பற்றியும் வாய்க்கு வந்தபடி பேசி யூடியூபில் பிரபலமானார் அந்த துணை நடிகை. பின்னர், சர்ச்சையாக பேசினால் பிரபலமாகலாம், வியூஸ் வந்தால் நிறைய காசு வரும் என நினைத்து முன்னணி நடிகர்கள் பற்றி பேசியதும் அவருக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது.

தொக்காக தூக்கிய போலீஸ்

தொக்காக தூக்கிய போலீஸ்

நடிகர்களை பற்றி பேசியதற்கு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட அந்த துணை நடிகை பின்னர், தேவையில்லாமல் சாதிய ரீதியாக பேச அம்மணியையும் அவருடைய ஆண் நண்பரையும் தொக்காக போலீசார் தூக்கினர். பின்னர் அழுது புரண்டு மன்னிப்பு கேட்க ஜாமினில் வெளிவந்த அவருக்கு எங்கேயும் வாய்ப்பே கிடைக்கவில்லையாம்.

சூசைட் டிராமா

சூசைட் டிராமா

வாய்ப்பே கிடைக்கல, சொகுசா வாழ காசில்லை அதனால சூசைட் பண்ணிக்க போறேன் என இன்னொரு டிராமாவை போட யாருமே கண்டு கொள்ளாமல் கழுவி ஊற்றினர். ஆனால், ஒரே ஒரு இயக்குநர் மட்டும் அவர் மீது இரக்கப் பட்டு அவருக்கு அட்டகாசமான கவர்ச்சி ரோலை வாரி வழங்க உறுதி கொடுத்தாராம். ஒரு வழியாக எப்படியோ நடிக்க வய்ப்பு கிடைத்து விட்டதே என அந்த சூப்பர் மாடல் சந்தோஷமாக சூட்டிங் போக அங்கே அவருக்கு வேறு ஒரு ரூபத்தில் அதிர்ச்சி காத்து இருந்ததாம்.

துரத்தியடித்த தயாரிப்பாளர்

துரத்தியடித்த தயாரிப்பாளர்

வெப்சீரிஸில் அரை நிர்வாணமாக நடிக்கும் சாதாரண ரோலில் நடிக்கவே இவரை அந்த இயக்குநர் அழைத்து சென்றிருக்கிறாராம். ஆனால், இவர் நடிக்கப் போகும் தகவல் எப்படியோ தயாரிப்பாளர் காதுக்கு எட்ட, அவர் பிரைட் நடிகரின் தீவிர ரசிகராம். துணை நடிகை ஏற்கனவே பிரைட் நடிகர் மற்றும் அவரது மனைவியை பற்றி துதி பாடியது எல்லாம் அவர் நினைவுக்கு வந்து போக இவங்க வேண்டாம், வேற ஆளை பாருங்க என இயக்குநருக்கு ஆர்டர் போட்டு அவரை துரத்தி அடித்துள்ளதாக பேச்சுக்கள் வலம் வருகின்றன.

English summary
Controversial model and actress exit from a hot webseries for this reason buzz trending in closed cinema circles. She got very upset after that producer avoids her for the short role.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.