’சும்மா வதந்தியை கிளப்பாதீங்க’ பதறிபோய் புகைப்படம் வெளியிட்ட எஸ்பிபி சரண்

தமிழ் மட்டுமல்லாது இந்திய இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்த எஸ்பிபி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார். அவருடைய மகன் எஸ்பிபி சரண், தொடர்ந்து சினிமா தயாரிப்பு மற்றும் இசைத்துறையில் பணியாற்றி வருகிறார். தமிழில் பிரபலமாக இருக்கும் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கெடுத்து வருகிறார். ஏற்கனவே சில படங்களை தயாரித்திருக்கும் எஸ்பிபி சரண், புதியதாக வெப்சீரீஸ் ஒன்றை எடுக்கிறார். அதில் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்த சோனியா அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர்.

மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா

எஸ்பிபி சரண் நடிப்பதாக தெரிகிறது. இதனால், சோனியா அகர்வாலுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புதிய விஷயம் என இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். உடனே, சோனியா அகர்வாலுடன் எஸ்பிபி சரணுக்கு திருமணம் நடக்கப்போகிறது, இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன. அதற்கேற்றார்போல் சோனியா அகர்வால் பட்டு சேலையும், கோட்சூட்டுடன் எஸ்பிபி சரணும் இருந்தனர்.

இருவரும் புகைப்படமும் இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாது முன்னணி சோஷியல் மீடியாக்கள் அனைத்திலும் வைரலானது. இதனையறிந்த எஸ்பிபி சரண், பதறிப்போய் அடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். அதில், அஞ்சலி மற்றும் குக்வித் கோமாளி பிரதாப் ஆகியோருடன் சோனியா அகர்வால் மற்றும் எஸ்பிபி சரண் இருக்கின்றனர். மேலும், இந்தியன் வெப்சீரிஸ், பிலிம் புரொடக்ஷன் என பதிவிட்டிருந்தார். இதன்பிறகே, இது ஒரு வெப்சீரீஸூக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை ரசிகர்கள் நம்பினர். எஸ்பிபி சரண் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர். சோனியா அகர்வால், இயக்குநர் செல்வராகவனை மணந்து பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பதால், ஜோடியான புகைப்படத்தை பார்த்தவுடன் வந்தந்தியை கொளுத்திப் போட்டுவிட்டனர்.  

மேலும் படிக்க | எக்ஸ்பிரஷனே வரவில்லை – விஜய்யை கலாய்த்த பீஸ்ட் வில்லன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.