பும்ரா பந்துவீச்சில் அடி வாங்கிய ரோகித் சர்மா – வீடியோ

India vs Leicestershire Practice Match: கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. அந்த அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 20 ஓவர், ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஜூலை 1 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் தொடங்க இருப்பதால், அதற்கு முன்னதாக லீசெஸ்டர்ஷயர் அணியுடன் 4 நாள் பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அடித்து நொறுக்கிவரும் DK! – ICC ரேட்டிங்கில் என்ன இடம் தெரியுமா?

இந்தப் போட்டி நேற்று தொடங்கியது. இந்திய அணி வீரர்களான ரிஷப் பன்ட், புஜாரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் பன்ட் ஆகியோர் லீசெஸ்ட்ஷயர் அணிக்காக களமிறக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் இந்திய அணிக்காக களமிறங்கினர். போட்டி தொடங்கியபோது, லீசெஸ்டர்ஷயர் அணி சார்பில் இந்திய அணிக்கு பாரம்பரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதன்பின்னர் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஓபனிங் இறங்கினர்.

பயிற்சி போட்டி என்பதால் இருவரும் நிதானமாக விளையாடினர். அப்போது, பும்ரா வீசிய பந்து கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக தாக்கியது. இதில் வலியால் அவர் மைதானத்திலேயே துடித்தார். ஆனால், பும்ரா இதனைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பந்துவீச சென்றுவிட்டார். அதேநேரத்தில் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பன்ட் ஓடிவந்து ரோகித் சர்மாவிடம் நலம் விசாரித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த அடிக்குப் பிறகு ரோகித் சர்மாவால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியவில்லை. முடிவில் 47 பந்துகளை சந்தித்து 25 ரன்கள் எடுத்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பரத் 111 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். விராட் கோலி 33 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஸ்ரேயாஸ் அய்யர் ரன் ஏதும் எடுக்காமலும், ஹனுமா விஹாரி 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. 

மேலும் படிக்க | ஜோ ரூட்டைப் போல கிரவுண்டில் பேட்டை நிறுத்தும் விராட் கோலி! – வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.