இட்லிக்கு இந்த காரச் சட்னி செஞ்சு சாப்பிடுங்க…ருசி தாறுமாறா இருக்கும்

நாம் இட்லி, தோசைக்கு எப்போதும் சாம்பார், தேங்காய் சட்னி வைத்துதான் சாப்பிடுவோம். சாம்பார், சட்னி இல்லை என்றால் இட்லி பொடி வைத்து சாப்பிடுவோம். ஆனால் சுவையான காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் சூரியாக இருக்கும். இத்தொகுப்பில் காரச் சட்னி எப்படி செய்வது என்று பார்போம்.

வெங்காயம் – 1

தக்காளி – 3,

பச்சை மிளகாய் –1,

காய்ந்த மிளகாய் – 6,

இஞ்சி- ஒரு சிறிய துண்டு

புளி -சிறிய துண்டு

உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்

 சீரகம் – ½ ஸ்பூன்

கடுகு – ½ ஸ்பூன்,

கறிவேப்பிலை – 1 கொத்து,

கொத்தமல்லித்தழை – 1 கொத்து

 பூண்டு – 10 பல்

எண்ணெய் – 3 ஸ்பூன்,

உப்பு – 1 ஸ்பூன்.

வெங்காயம்,  தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். தொடர்ந்து பூண்டை தோலுரித்து வைத்துகொள்ளுங்கள். பிறகு 6 காய்ந்த மிளகாயைக் காம்பு கிள்ளி வைத்து கொள்ளுங்கள்.

அடுப்பை பற்ற வைத்து, கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு இவற்றுடன் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை  வறுக்க வேண்டும். இதைத்தொடர்ந்து நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக குழைந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

இவற்றுடன் தேவைகேற்ற உப்பு சேர்த்துகொள்ளவும்.  இறுதியாக சிறிய துண்டு புளி சேர்த்து வதக்க வேண்டும் . அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு  இவற்றை நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.