Sudan protest: சூடானில் ஆட்சி கவிழ்ப்பை எதிர்த்த போராட்டக்காரர்களில் 9 பேர் பலி

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வன்முறை ஒடுக்குமுறையில் 9 பேர் கொல்லப்பட்டனர்

சூடான் நாட்டில் 2019ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டது. அதையடுத்து, ஜனநாயகரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ்நிலையில், கடந்த (2022) அக்டோபர் மாதம் அரசுக்கு எதிராக ராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தே அல் புர்ஹான் புரட்சியை தொடங்கினார்.

சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்தக்கை ராணுவத்தினர் சிறைபிடித்தனர். அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அப்துல்லா ஹம்தக் பதவியில் தொடர்வார் என ராணுவம் அறிவித்தது..

இதனிடையே ராணுவப்புரட்சிக்கு எதிரான போராட்டம் சூடானில் வெடித்தது. நேற்று நடந்த போராட்டத்தின்போது ராணுவத்தினரும் பொதுமக்களும் மோதிக்கொண்டனர். இதில் போராட்டக்காரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

மேலும் படிக்க | UFO: பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறதா? பறக்கும் தட்டு எழுப்பும் கேள்விகள்

நாட்டை பேரழவில் இருந்து காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக கூறிய சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தக், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு எதிர்ப்பு தொடர்பான வன்முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 114ஐ எட்டியுள்ளது. ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை எதிர்ப்புத் தெரிவிக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் தலைநகர் கார்ட்டூம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாழன் அன்று நடைபெற்ற பேரணிகளில் மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர். அப்போது பாதுகாப்புப் படைகளின் வன்முறை ஒடுக்குமுறையில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த அக்டோபரில் இராணுவத் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவக் கையகப்படுத்துதலுக்கு எதிரான நீண்டகால போராட்டங்களில் பல மாதங்களாக மிக மோசமான நாள் இது என்று AFP செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | உக்ரைனின் மிக முக்கிய லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதா

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், டயர்கள் மற்றும் தடுப்பு அரண்களை எரித்தனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தோட்டாக்களைப் பயன்படுத்தினார்கள்.

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளும், சக்திவாய்ந்த நீர் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. 2019 ஆம் ஆண்டு நீண்டகால சர்வாதிகார ஆட்சியாளர் உமர் அல்-பஷீர் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் தொடங்கப்பட்ட சிவில் ஆட்சிக்கான மாற்றத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு எதிர்ப்பு தொடர்பான வன்முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 114ஐ எட்டியுள்ளது. ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை சூடானை மேலும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.  

மேலும் படிக்க | அணு ஆயுத போர்; 30 நிமிடங்களில் 100 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

ம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.