சூர்யாவின் இந்த இரண்டு படங்கள் நான் பண்ண வேண்டியது – மாதவன்!

பல பெண்களுக்கு பிடித்தமான நடிகராக திகழ்ந்த மாதவன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம்  ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’.  மாதவன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் இந்த வாழ்க்கை வரலாற்று படமானது  1994ம் ஆண்டு உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | விஜய்யை கலாய்த்துவிட்டு தற்போது நன்றி கூறும் கோமாளி இயக்குனர்!

விக்ரம் படத்தை தொடர்ந்து, இந்த படத்தில் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.  இப்படத்தில் நடித்ததற்காக சூர்யா எவ்வித சம்பளமும் வாங்கிகொள்ளவில்லை என்று நடிகர் மாதவன் அவரை பற்றி சமீபத்தில் புகழ்ந்து பேசியிருந்தார்.  தற்போது சூர்யா அவரது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் இருக்கிறார், இந்நிலையில் மாதவன் மற்றும் சூர்யா இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ்-ல் அவர்களது படங்கள் குறித்தும், நீண்ட கால நட்பு குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து வந்தனர்.  அப்போது நடிகர் சூர்யா ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ள முடியாமல் போனது எனக்கு வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

madhavan

அதனை தொடர்ந்து சில முக்கியமான விஷயங்களை மாதவன் பகிர்ந்து கொண்டார்.  அவர் பேசுகையில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்ட படங்களான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கஜினி’ படம், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘காக்க காக்க’ ஆகிய இரண்டு படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு முதலில் எனக்கு தான். ஆனால் அப்போது இருந்த சூழ்நிலையில் என்னால் பல்வேறு காரணங்களால் அந்த இரு படங்களிலும் நடிக்கமுடியாமல் போகவே, சூர்யா அந்த படத்தில் நடித்தார்.  அந்த இரண்டு பிளாக்பஸ்டர் படங்களிலும் சூர்யா அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | சுதா கொங்கரா படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் துல்கர் சல்மான்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.