ஹைதராபாத்: சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை போட்டு தனக்கு PCOS பிரச்சனை இருக்கு எனக் கூறியிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.
ஸ்ருதிஹாசனே அப்படியொரு வெளிப்படையான வீடியோவை போட்ட நிலையில், அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று சிலர் பொய்யான தகவலை பரப்பி உள்ளனர்.
அதை பார்த்து கடுப்பான ஸ்ருதிஹாசன் தனக்கு ஒன்றுமில்லை, நன்றாகத்தான் இருக்கேன் என தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
ஸ்ருதிஹாசனுக்கு அந்த பிரச்சனை
சமீப காலமாக பல பெண்களுக்கு PCOS எனும் மரபணு பிரச்சனை ஏற்பட்டு சீரான மாதவிடாய் வராமல் அவதிப்படுகின்றனர். அதுபோன்ற ஒரு பிரச்சனையில் தானும் அவதிப்பட்டு வருகிறேன். ஆனால், அதற்காக சோர்ந்து விடவில்லை, உடற்பயிற்சிகளை செய்து என் உடலை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறேன் என பெண்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் ஸ்ருதிஹாசன் பாசிட்டிவ் நோட்டில் போட்ட வீடியோ அவருக்கே நெகட்டிவ் ஆக மாறி விட்டது.

ஏகப்பட்ட வதந்தி
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பெரிய வியாதி வந்திடுச்சாம், அவருடைய உடல் எடை குறைந்து, தோற்றம் இந்த அளவுக்கு டல் அடிக்க காரணமே அதுதான் என்றும், கருத்தரிப்பு பிரச்சனை உள்ளிட்டவையும் ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது போன்ற ஏகப்பட்ட யூகங்களும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் கிளம்ப தொடங்கியதும், பல சினிமா பிரபலங்களே போன் போட்டு ஸ்ருதிஹாசனிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

ஊதிப் பெருசாக்கிட்டாங்க
இந்நிலையில், பதறி அடித்துக் கொண்டு காரில் சென்றபடியே ஒரு வீடியோவை தற்போது போட்டுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். அந்த வீடியோவில் நான் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு உடல் நலம் சீராக உள்ளது. PCOS பிரச்சனை இருப்பது உண்மை தான். ஆனால், என்னைப் பற்றி தேவையற்ற வதந்திகளை பலரும் பரப்பி வருகின்றனர். சிறிய விஷயத்தை ஊதி பெருசாக்கிட்டாங்க என பொங்கி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

மருத்துவமனையில் அட்மிட் ஆகல
மேலும், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஸ்ருதிஹாசன், நான் ஒன்றும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சீரியஸான ஸ்டேஜில் இல்லை. நல்லா ஆரோக்கியமாகத்தான் இருக்கேன். என்னால் உடல் பயிற்சி செய்ய முடிகிறது. படங்களில் நடித்து வருகிறேன். வீணான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டு அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

பிரபாஸ் படத்தில்
கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடித்து வரும் சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். மும்பையை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா எனும் ஓவியக் கலைஞரை காதலித்து வரும் ஸ்ருதிஹாசன் அவருடன் நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.