காப்பி பேஸ்ட் பண்ண மாதிரி இருக்கு.. பொன்னியின் செல்வன் போஸ்டர் டிசைனை கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: பாகுபலி படத்தின் ஒவ்வொரு விஷயத்துக்கும், தெலுங்கு ரசிகர்கள் பெரியளவில் வரவேற்ற நிலையில், பொன்னியின் செல்வன் பற்றி எந்தவொரு அறிவிப்பு வெளியானாலும், வரவேற்பை விட ட்ரோல்களே அதிகமாக உள்ளது.

நேற்று சியான் விக்ரமின் ஆதித்த கரிகாலன் போஸ்டர் வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் ஃபயரா இல்லையேன்னு விமர்சித்தனர்.

இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் கார்த்தியின் வந்தியத்தேவன் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் விக்ரமை தூக்கிட்டு அந்த இடத்தில் கார்த்தியை காப்பி பேஸ் பண்ணி வச்சிட்டாங்களே என பங்கம் பண்ணி வருகின்றனர்.

பெரிய லெவல் புரமோஷன் இல்லை

அடுத்த ஆண்டு வெளியாகப் போகும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் அறிவிப்பு போஸ்டரையே பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், இயக்குநர் ஆனந்த் எல் ராய் எல்லாம் வெளியிடும் நிலையில், பொன்னியின் செல்வன் படத்துக்கு எந்தவொரு பில்டப்பும் இல்லாமல் சாதாரணமாக லைகா நிறுவனம் முன்னறிவிப்புக் கூட இல்லாமல் அப்படியே புதிய போஸ்டர்களை விட்டு வருவதாக ரசிகர்கள் லைகாவின் புரமோஷன் டீம் மேல் ஏகப்பட்ட புகார்களை அடுக்கி வருகின்றனர்.

பான் இந்தியா படம் தானே

பான் இந்தியா படம் தானே

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் எல்லாம் இருக்காங்க, பான் இந்தியா அளவுக்கு படத்தை புரமோட் செய்ய ஏகப்பட்ட ஏற்பாடுகளை இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் செய்ய வேண்டும் என ரசிகர்களே விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து வெளியாகும் கேரக்டர் போஸ்டர்களை பார்த்ததும் ஏகப்பட்ட கேள்விகளையும் விமர்சனங்களையும் அடுக்கி வருகிறார்களே தவிர அதனை கொண்டாடுவதை அதிகளவில் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் லுக்கில் ஃபயர் இல்லையே

விக்ரம் லுக்கில் ஃபயர் இல்லையே

ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் நடித்துள்ளார் என்கிற அறிவிப்பு போஸ்டரை பார்த்த ரசிகர்கள், ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இது பரவாயில்லை என்றும், ஆனால், முகத்தில் ஏதோ ஃபயர் இல்லையே.. எடிட்டிங் ஏதும் செய்யாமல் அப்படியே போட்டோவை போட்டது போல இருக்கே என ரசிகர்கள் ஃபீல் செய்து கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வந்தனர்.

காப்பி பேஸ்ட் செஞ்சிட்டாங்க

காப்பி பேஸ்ட் செஞ்சிட்டாங்க

இந்நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் கார்த்தியின் வந்தியத்தேவன் போஸ்டர் வெளியானது. அதை பார்த்ததுமே, நேற்று வெளியான விக்ரம் போஸ்டரில் அவரை மட்டும் அப்படியே அலேக்காக தூக்கிட்டு அந்த இடத்தில் கார்த்தி குதிரையில் இருக்கும் புகைப்படத்தை வைத்து எடிட் செய்தது அப்படியே அப்பட்டமாக தெரிய, புதுசா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டிசைன் கூட பண்ண மாட்டீங்களா? என விளாவி வருகின்றனர்.

விஜய், அஜித் படமா இருந்தா

விஜய், அஜித் படமா இருந்தா

வந்தியத்தேவன் நெற்றியில் திருநீறு இல்லை, கார்த்திக்கு பெரிய பைசப்ஸ் இல்லை என குறைகளாக கண்டுபிடித்து ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், இதுவே அஜித் அல்லது விஜய் படத்தின் போஸ்டராக இருந்தால், அது சுமாராக இருந்தாலும், சூப்பர் என ஆன்லைன் ரசிகர்கள் கொண்டாடி இருப்பார்கள் என்றும், பொன்னியின் செல்வன் படத்தை எப்படியாவது ட்ரோல் செய்தே காலி செய்து விட வேண்டும் என்கிற முனைப்பு தான் நெட்டிசன்கள் பலருக்கும் என பக்கத்து ஸ்டேட் பாகுபலி ரசிகர்களே விளாசி வருவது வெட்கக் கேடான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு தூக்கி நிறுத்தப் போகிறது என நம்பி வரும் நிலையில், படக்குழுவும் அவர்களை உற்சாகப்படுத்தும் ஜிகினா வேலைகளில் சற்றே தீவிரம் காட்டத்தான் வேண்டும்.

English summary
Netizens trolls Ponniyin Selvan character design posters of Vikram and Karthi out by Lyca Productions. Fans expecting a hefty promotions from the production side but, the makers done a little didn;t satisfy the audience.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.