சாமியார் ஆனார் திண்டுக்கல் லியோனி

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள்  இணைந்து நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு K இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி படமாக உருவாகியுள்ள பன்னிக்குட்டி ஜுன் 8ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய திண்டுக்கல் லியோனி, “இந்தப் படத்தின் மூலமாக 21 வருடங்களுக்கு பிறகு நடிப்பிற்கு திரும்ப வருகிறேன். இந்த படத்தில் என்னை தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் சாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை காரணமாகத்தான் இயக்குநர் என்னிடம் கொடுத்திருக்கிறார். 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன்: வந்தான் வந்தியத்தேவன், கார்த்தி கதாபாத்திரத்தின் போஸ்டர் ரிலீஸ்

எந்தவித பதட்டமும் இல்லாமல் இயக்குனர் அனுசரண் வேலை பார்ப்பார். கருணாகரனுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியாக இருக்கும். அனுசரண் நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்குவதில் திறமைக்காரர் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் கே, “பன்னிக்குட்டி” எனக்கு முக்கியமான படம், தொடர்ந்து சீரியஸான படங்களை செய்துகொண்டிருக்கும் வேளையில் இந்த படம் எனக்கு மிக நெருக்கமாக அமைந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. இது உங்களுக்கு நிச்சயமாக பிடித்த படமாக இருக்கும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை என பேசினார்.

அடுத்ததாக இயக்குநர் அனுசரண் பேசியபோது, “எனக்கு வாய்ப்புகொடுத்த லைகாவிற்கும், ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும் போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன். 

மேலும் படிக்க | சோழர்கள் சிவ பக்தர்களா? திருமால் பக்தர்களா?! சர்ச்சையில் சிக்கிய பொன்னியின் செல்வன்

ரவி முருகையா உடைய கதை தான் இந்த பன்னிகுட்டி. இந்த கதையை தயாரிப்பாளரிடம் கூறும் போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் லியோனி சார் நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்து கொண்டிருப்பவர்கள், ஆனால் முழு அர்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இந்த கதைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்” என்றார்.

மேலும் படிக்க | அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு மாகாபா மற்றும் பிரியங்கா வாங்கும் சம்பளம் இவ்வளவா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.