தனுஷின் அடுத்த அதிரடி.. திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா…எப்போ தெரியுமா ?

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்காக கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். சில வருட இடைவெளுக்குப் பின் தனுஷ் அனிருத் கூட்டணி இந்த படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்ததை அடுத்து, வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.

திருச்சிற்றம்பலம்

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர்கள் தனுஷ், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ஆகியோர் நடித்துள்ளேன். வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்தப் படம் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.

'தாய்க்கிழவி'

‘தாய்க்கிழவி’

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் திருச்சிற்றம்பலம் படத்தில இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘தாய்க்கிழவி’ பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி அவரே பாடியிருந்தார். மேலும், தாய்கிழவி என்ற வார்த்தை மூத்த வயதான உறவுகளை தவறாக அழைக்க வழிவகுக்கும் எனவே அந்த வரியை நீங்கவேண்டும் என சர்ச்சை எழுந்தது. இருப்பினும் இப்பாடல் யூ டியூபில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

இசைவெளியீட்டு விழா

இசைவெளியீட்டு விழா

இந்நிலையில் திருசிற்றம்பலம் படத்தில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி இசைவெளியீட்டு விழாவை நடத்த வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல படங்களில் பிஸி

பல படங்களில் பிஸி

தனுஷ் தற்போது வாத்தி,நானே வருவேன் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான தி கிரேட் மேன். திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

English summary
Thiruchitrambalam is Dhanush’s fourth collaboration with director Mithran Jawahar.audio launch function date

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.