பூலாம்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 750 மூட்டை பருத்தி ₹24 லட்சத்திற்கு விற்பனை

இடைப்பாடி : பூலாம்பட்டியில் உள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 750 மூட்டை பருத்தி ₹24 லட்சத்திற்கு விற்பனையானது. பூலாம்பட்டியில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் பூலாம்பட்டி, குப்பனூர், நெடுங்குளம், கோனேரிப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 750 மூட்டைகள் ₹24 லட்சத்திற்கு ஏலம் போனது. பிடி ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ₹7,499 முதல் அதிகபட்சமாக ₹9,439 வரை ஏலம் போனது. விவசாயிகளுக்கு உடனுக்குடன் ரொக்கம் வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.