மேலே வீடு, கீழே ஜெயில் செட்அப்! 7 வயது சிறுவனை.. இரண்டு மாதங்கள் கதற கதற! இளைஞன் வெறிச்செயல்! பகீர்

மேலே வீடு, கீழே ஜெயில் செட்அப்! 7 வயது சிறுவனை.. இரண்டு மாதங்கள் கதற கதற! இளைஞன் வெறிச்செயல்! பகீர்

மாஸ்கோ: ரஷ்யாவில் பள்ளி சென்ற சிறுவனைக் கடத்தி இளைஞர் செய்த பகீர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகெங்கும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சிறார்களைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் சமீப ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

அப்படி தான் ரஷ்யாவில் பள்ளி சென்ற சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ்! உக்ரைன் போருக்கு இடையே சந்திக்கும் தலைகள்! இந்தியா, ரஷ்யா, சீனாவை கண்காணிக்கும் அமெரிக்காபிரிக்ஸ்! உக்ரைன் போருக்கு இடையே சந்திக்கும் தலைகள்! இந்தியா, ரஷ்யா, சீனாவை கண்காணிக்கும் அமெரிக்கா

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவைச் சேர்ந்த 28 வயது இளைஞன் டிமிட்ரி கோபிலோவ். இவன் பள்ளிச் சென்று திரும்பிய 7 வயது சிறுவன் ஒருவனைப் பள்ளி பேருந்தில் இருந்து கடத்தி உள்ளான். பின்னர், அந்தச் சிறுவனை சுமார் இரு மாதங்கள் பதுங்கு குழியில் பிணைக் கைதியாக அடைத்து வைத்துள்ளான். அப்போது அந்தச் சிறுவனை பாலியல் ரீதியாகவும் டிமிட்ரி கோபிலோவ் துன்புறுத்தி உள்ளான். சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய டிமிட்ரி கோபிலோவ், அதை வீடியோவாகவும் பதிவு செய்து மற்றவர்களுக்கும் விநியோகித்து உள்ளான்.

இண்டர்போல்

இண்டர்போல்

இன்டர்போல் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடந்த 2020 நவம்பரில் அந்தக் குழந்தை மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். டார்க் வெப்பில் தான் சிறுவனைப் பிடித்து வைத்து உள்ளதைப் பற்றி கோபிலோவ் பெருமையாகக் கூறி உள்ளான். அதன் அடிப்படையிலேயே இன்டர்போல் அதிகாரிகள் ரஷ்யப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையிலேயே ரஷ்யப் படைகள் நடவடிக்கை எடுத்தனர்.

 ஜெயில் செட்அப்

ஜெயில் செட்அப்

மாஸ்கோவில் இருந்து 185 மைல் தொலைவில் உள்ள விளாடிமிர் பகுதியில் கோபிலோவின் வீடு அமைந்துள்ளது. மேலே, கோபிலோ வசித்து வரும் நிலையில், கீழே பேஸ்மெண்டில் அந்த சிறுவனை அடைத்து உள்ளான். அந்த பேஸ்மெண்ட் எஃகுக் கதவைக் கொண்டு இருந்தது. அதற்கு உள்ளே ரஷ்யப் படைகள் சென்று பார்த்த போது, அதிர்ச்சி அடைந்துவிட்டனர். தாழ்வான மேற்சுவரை கொண்டு இருந்த அந்த பேஸ்மெண்ட் குழந்தைகளை வைக்கவே பிரத்தியேகமாகக் கட்டப்பட்டு இருந்தது. அது பார்க்க ஒரு மினி ஜெயில் செட்அப்பில் இருந்தது.

 துன்புறுத்தல்

துன்புறுத்தல்

சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வீட்டை வாங்கிய கோபிலோவ், அதை மறுசீரமைப்பு செய்துள்ளான். வெளிப்புறம் மட்டுமின்றி, அப்போது தான் வீட்டில் பதுங்கு குழியையும் கட்டி உள்ளான். வெளியே இருந்து யாருமே கண்டுபிடிக்காத வதையில் இந்த பதுங்கு குழியை அவன் கட்டி உள்ளான். சிறுவர்கள் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கு என்றே இந்த அறையை அவன் வடிவமைத்து உள்ளான்.

 மன நலப் பாதிப்பு

மன நலப் பாதிப்பு

அதிகாரிகள் அந்த கட்டிடத்தை முற்றுகையிட்டபோது கோபிலோவ் சிறுவனுடன் சோபாவில் அமர்ந்திருந்தார். அந்தச் சிறுவன் மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தாகவே தெரிகிறது. முதலில் ரஷ்யப் படைகளை உள்ளே நுழைந்ததும், அவர்களைப் பார்த்துச் சிரித்துள்ளான். பின்னர், கண்ணாடியை ஏன் உடைத்தீர்கள் என ஆவேசமாகக் கத்தி உள்ளான். அதன் பின்னரே நிலைமை உணர்ந்து போலீசாரிடம் அழுது கதறினார்.

 19 ஆண்டுகள் சிறை

19 ஆண்டுகள் சிறை

சிறுவனை மீட்ட போலீசார் அவரை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணையில் டிமிட்ரி கோபிலோவ் மீது மொத்தம் 62 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. அதேபோல மற்றொரு சிறுவனையும் டிமிட்ரி கோபிலோவ் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் டிமிட்ரி கோபிலோவ்க்கு பிணையில் வெளிவர முடியாத வகையில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

 மேல்முறையீடு

மேல்முறையீடு

இதையடுத்து அவன் ரஷ்யாவில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளான். சிறையில் இருக்கும் போது, அவனுக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும், தான் யாரையும் கொலை செய்யவோ ஊனப்படுத்தவோ இல்லை என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக டிமிட்ரி கோபிலோவ் தெரிவித்துள்ளார்.

English summary
Man kidnapped boy from school bus and kept him in underground pit for 2 months Man has been jailed for 19 years for kidnapping and torturing him for 52 days: (சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்த இளைஞர் கைது) Russia Youth abusing Seven year old child.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.