விக்ரம் நெற்றியில் இருப்பது திலகமா?..சர்ச்சையில் சிக்கிய பொன்னியின் செல்வன் போஸ்டர் !

சென்னை
:
பொன்னியின்
செல்வன்
படத்தில்
யார்
யார்
எந்தெந்த
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்கள்
என்பதை
ஒவ்வொன்றாக
படக்குழு
வெளியிட்டு
வருகிறது

இரண்டு
பாகங்களாக
வெளியாகவுள்ள
இந்தப்
படத்தின்
முதல்
பாகம்
செப்டம்பர்
மாதம்
30ந்
தேதி
வெளியாக
உள்ளது.
இப்படத்தை
லைகா
நிறுவனம்
வழங்க,
மெட்ராஸ்
டாக்கீஸ்
நிறுவனம்
தயாரித்து
வருகிறது.

இப்படத்தில்
ஆதித்த
கரிகாலனாக
நடிக்கும்
விக்ரமின்
போஸ்டரை
நேற்று
படக்குழு
வெளியிட்டது.
இந்த
போஸ்டரை
பார்த்த
பொன்னியின்
செல்வன்
ரசிகர்கள்
போஸ்டரில்
ஏகப்பட்ட
குறைகள்
இருப்பதாக
கூறி
ட்விட்டரில்
விமர்சித்து
வருகின்றனர்.

பொன்னியின்
செல்வன்

தமிழ்
சினிமாவின்
தலைசிறந்த
இயக்குனராக
விளங்கும்
மணிரத்னம்,
தனது
கனவு
படமான
பொன்னியின்
செல்வனை
வெற்றிகரமாக
இயக்கி
முடித்துள்ளார்.
இப்படத்தில்
விக்ரம்,
ஜெயம்
ரவி,
கார்த்தி,
திரிஷா,
ஐஸ்வர்யா
ராய்,
விக்ரம்
பிரபு,
சரத்குமார்,
பார்த்திபன்,ஜெயராம்,
ஐஸ்வர்யா
லெக்ஷ்மி,
சோபிதா
துளிபாலா,
பிரகாஷ்ராஜ்,
ஜெயசித்ரா
என
மிகப்பெரிய
நட்சத்திர
பட்டாளமே
நடித்துள்ளனர்.

ரூ.800 கோடி பட்ஜெட்டில்

ரூ.800
கோடி
பட்ஜெட்டில்

பொன்னியின்
செல்வன்
படத்துக்கு
ஏ.ஆர்.ரகுமான்
இசையமைக்க,
ரவிவர்மன்
ஒளிப்பதிவு
பணிகளை
மேற்கொண்டுள்ளார்.
லைகா
நிறுவனம்
ரூ.800
கோடி
பட்ஜெட்டில்
பிரம்மாண்டமாக
தயாராகி
உள்ள
இப்படம்
இரண்டு
பாகங்களாக
வெளியாக
உள்ளது.
அதன்படி
பொன்னியின்
செல்வன்
படத்தின்
முதல்
பாகம்
வருகிற
செப்டம்பர்
மாதம்
30-ந்
தேதி
ரிலீசாக
உள்ளது.

டீசர் ரிலீஸ்

டீசர்
ரிலீஸ்

பொன்னியின்
பிரம்மாண்டமான
படம்
என்பதால்
டீசர்
வெளியீட்டை
பிரம்மாண்டமாக
நடத்த
படக்குழு
திட்டமிட்டது.
தஞ்சை
மண்ணுடன்
நெருங்கிய
தொடர்புடைய
படம்
என்பதால்,
படத்தின்
டீசரை
அங்கிருந்து
வெளியிட
படக்குழு
திட்டமிட்டிருந்தது.
ஆனால்,
தற்போது
தஞ்சாவூரில்
டீசர்
வெளியீட்டு
திட்டத்தை
படக்குழு
கைவிட்டு
ஒரு
சிறிய
டீசரை
மட்டும்
வீடியோவாக
வெளியிட
முடிவு
செய்துள்ளதாக
கூறப்படுகிறது.

ஆதித்த கரிகாலன்

ஆதித்த
கரிகாலன்

இந்நிலையில்,
நேற்று
ஆதித்த
கரிகாலன்
கதாபாத்திரத்தில்
நடிக்கும்
விக்ரமின்
தோற்றத்தைதான்
படக்குழு
வெளியிட்டு
இருந்தது.
அந்த
போஸ்டரில்
விக்ரம்
நெற்றில்
நாமம்
போட்டு
இருப்பது
போல
உள்ளது.
இதைப்பார்த்த
பொன்னியின்
செல்வன்
ரசிகர்கள்
சோழர்கள்
சுத்த
சைவர்கள்
என்றும்
அவர்கள்
எப்படி
நாமம்
போடுவார்
என்ற
கேள்வியை
எழுப்பி
உள்ளனர்.

வெற்றித்திலகமா?

வெற்றித்திலகமா?

இன்னும்
சில
நெட்டிசன்ஸ்,
விக்ரம்
நெற்றியில்
இருப்பது
நாமம்
இல்லை
என்றும்
போருக்கு
செல்லும்போது
வைக்கப்படும்
வெற்றித்திலகம்
என்றும்
பதிலடி
கொடுத்து
வருகின்றனர்.
வரலாற்று
சிறப்புமிக்க
ஒரு
படத்தை
அனைவரும்
எதிர்பார்த்து
காத்திருக்கும்
நேரத்தில்,
வெளியான
போஸ்டரிலேயே
இவ்வளவு
சர்ச்சை
என்றால்,
படம்
வெளியானால்
என்னென்ன
சர்ச்சை
வரப்போகிறதோ
தெரியவில்லை.

English summary
Director Manirathna’s Ponniyin selvan movie Aditya Karikalan poster controversy

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.