எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து படையினரை அகற்ற யோசனை – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயுதப் படையினரை, அக்கடமைகளில் இருந்து அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களும் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய இது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக அறிய முடிகிறது.

எவ்வாறாயினும், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டி ஆரச்சி தெரிவித்துள்ளார்.

எனினும், அடுத்து வரும் நாட்களில் அவ்வாறான ஒரு தீர்மானம் எட்டப்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து படையினரை அகற்ற யோசனை  - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு | Idea To Remove Soldiers From Fuel Stations

சிவில் நடவடிக்கைகளை பொலிஸார் ஊடாக முன்னெடுக்க தீர்மானம்

சிவில் நடவடிக்கைகள் அனைத்தையும் பொலிஸார் ஊடாக முன்னெடுக்கவும், அவசியம் ஏற்பட்டால் மட்டும் உதவிக்கு ஆயுதப் படையினரை அழைக்கும் வகையிலும் பொலிஸாருக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்க பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக அறிய முடிகிறது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அண்மை நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் படையினருடன் பொது மக்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், பொலிஸார் மற்றும் படையிணருக்கு இடையிலும் மோதல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து படையினரை அகற்ற யோசனை  - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு | Idea To Remove Soldiers From Fuel Stations



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.