கிளீனர் டூ சிஇஓ.. மில்லியன் டாலர் சொத்து.. திகைக்க வைக்கும் அமீர்..!

விமான நிலையத்தில் ஒரு துப்புரவு தொழிலாளியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து படிப்படியாக தனது அயராத உழைப்பின் மூலம் வளர்ச்சி அடைந்து சி.இ.ஓ ஆன இந்தியர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்திய இளைஞர்கள் தற்போது கடுமையான உழைப்பு மற்றும் திறமை காரணமாக பல உயர்ந்த இடங்களில் இருந்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக உலகின் பல முன்னணி நிறுவனங்களின் சிஇஓ ஆக இந்தியர்கள் தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காஃபி ஆர்டர் எடுக்கும் டிவிட்டர் சிஇஓ.. பராக் அகர்வால் செயலால் ஊழியர்கள் ஷாக்..!

துப்புரவு தொழிலாளி டூ சி.இ.ஓ

துப்புரவு தொழிலாளி டூ சி.இ.ஓ

அந்தவகையில் துப்புரவு தொழிலாளியாக தனது முதல் வேலையை ஆரம்பித்து அதன் பின் படிப்படியாக உயர்ந்து ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக வளர்ந்து இருப்பவர் இந்தியாவில் அமீர் குதுப். அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை தற்போது பார்ப்போம்.

எம்பிஏ படிப்பு

எம்பிஏ படிப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்த அமீர் குதுப், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்று ஜிலாங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க சென்றார். அவருக்கு முதல் மூன்று மாதம் அரசின் உதவித் தொகை கிடைத்தது.

படித்து கொண்டே வேலை
 

படித்து கொண்டே வேலை

ஆனால் ஏற்கனவே அவர் தனது எம்பிஏ படிப்புக்காக தனது தந்தையிடம் 5 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கியதால் மீண்டும் அவரிடம் பணம் வாங்க அவர் விரும்பவில்லை. இதற்காக அவர் படித்துக் கொண்டே வேலை செய்வதற்காக 170 நிறுவனங்களுக்கு பகுதி நேர வேலைக்காக விண்ணப்பம் செய்தார். ஆனால் ஒரு நிறுவனத்திடம் இருந்து பதில் வரவில்லை.

துப்புரவு தொழிலாளி

துப்புரவு தொழிலாளி

இறுதியில் அவர் ஜிலாங் விமான நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார். ஆனால் வாரத்தில் நான்கு நாட்கள் காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை அங்கு பணியாற்ற வேண்டிய நிலை இருந்ததால் அவர் படிப்பு பாதித்தது. இதனை அடுத்து அந்த வேலையை அவர் கைவிட்டார்.

பேப்பர் போடும் வேலை

பேப்பர் போடும் வேலை

அதன்பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் செய்தித்தாள் போடும் வேலையை கண்டுபிடித்தார். அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த வேலை காலை 8 மணிக்கு முடிவடைந்து விடும் என்பதால் அவருக்கு படிப்பில் கவனம் செலுத்த போதுமான நேரம் கிடைத்தது.

இன்டர்ன்ஷிப் பணி

இன்டர்ன்ஷிப் பணி

இதனை அடுத்து ஐடி நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பணியில் இறங்கினார். அங்கு அவர் ஒரு நிறுவனத்திற்கான முழு வணிக மாதிரியை தயாரித்துக் கொடுத்ததால் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை அடுத்து அவருக்கு 5000 ஆஸ்திரேலிய டாலர் சம்பளத்தில் பதவி உயர்வு பெற்றார்.

 ஜெனரல் மேனேஜர்

ஜெனரல் மேனேஜர்

பொது மேலாளரின் கீழ் நேரடியாக அவர் பணிபுரிந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அமீர் குதுப் இடைக்கால ஜெனரல் மேனேஜராக நியமிக்கப்பட்டார். தனது பணியை தனது அயராத உழைப்பு மற்றும் திறமையால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர் ஈடுபட்டதால் நிர்வாக குழுவினர்களை கவர்ந்தார். இதனை அடுத்து எம்பிஏ படித்து முடித்த பின்னர் அவர் நிரந்தரமாக ஜெனரல் மேனேஜராக அகப்பட்டார். 25 வயதில் ஒரு நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜராக ஆகிய நிலையில் அவருடைய வருமானம் 300% அதிகரித்தது.

சொந்த நிறுவனம்

சொந்த நிறுவனம்

கடந்த 2014ஆம் ஆண்டு அவர் பணிபுரிந்து கொண்டிருக்கும் போதே வணிக முயற்சி ஒன்றை தொடங்கினார். Enterprise Monkey Proprietor Ltd என்ற நிறுவனத்தை தொடங்கினார். தனது சேமிப்பில் அவர் வைத்திருந்த 4 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். தானே சிஇஓவாக பதவி ஏற்றுக் கொண்ட அமீர், Enterprise Monkey Proprietor Ltd என்ற நிறுவனத்தை மெல்போர்ன் மற்றும் ஜீலாங்கை தளமாக கொண்டு தனது நிறுவனத்தை மேம்படுத்தினார். அவரது வணிகமும் வளர்ந்தது.

விருது

விருது

தற்போது அவர் ஆஸ்திரேலிய நாட்டின் இளம் வணிக தலைவர் என்ற விருதையும் வென்றுள்ளார். சொந்த நிறுவனம் தொடங்கிய 5 ஆண்டுகளில் அவரது வணிகம் 2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக உயர்ந்தது. இந்திய மதிப்பில் இது சுமார் 12 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய நிறுவனம் தற்போது மேலும் நான்கு நாடுகளில் கிளைகளை அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

From a cleaner to CEO: Meet Indian techie Aamir Qutub

From a cleaner to CEO: Meet Indian techie Aamir Qutub | கிளீனர் டூ சிஇஓ.. மில்லியன் டாலர் சொத்து.. திகைக்க வைக்கும் அமீர்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.