கோடக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் வங்கிகளுக்கு ரூ.1 கோடி அபராதம்: என்ன காரணம்?

விதிமுறைகளை மீறும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு அவ்வப்போது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கிக்கு ரூபாய் 1.05 கோடியும், இண்டஸ் இண்ட் வங்கிக்கு ரூபாய் 1 கோடியும் அபராதம் விதித்துள்ளது.

ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!

இந்த இரண்டு வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் சில ஒழுங்கு முறை வழிகாட்டலுக்கு இணங்க தவறியதாக அபராதத்திற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தனியார் வங்கிகளான கோடக் மகேந்திரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் சில ஒழுங்குமுறை வழிகாட்டலுக்கு இணங்க தவறியதாக அபராதம் விதித்துள்ளது.

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கி, வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 66-ஏ பிரிவு 2ன் கீழ் விதிகளை மீறியதற்காக அந்த வங்கிக்கு ரூ 1.05 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் 31 மற்றும் 2019ஆம் ஆண்டு மார்ச் 31 ஆகிய தேதிகளில் வங்கியின் நிதி நிலைகளைக் குறிக்கும் வகையில் வங்கியின் மேற்பார்வை மதிப்பீட்டிற்கான சட்டபூர்வ ஆய்வு நடத்தப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆய்வு
 

ஆய்வு

இந்த ஆய்வில் ஆபத்து மதிப்பீடு அறிக்கைகள், ஆய்வு அறிக்கைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து கடிதங்களின் ஆய்வு முடிவுகள் வெளிப்பட்ட நிலையில் சட்டத்தின் சில விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், வழிகாட்டுதல் மீறப்பட்டு உள்ளதாகவும் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அபராதத்திற்கு காரணம்

அபராதத்திற்கு காரணம்

நிர்ணயிக்கபட்ட காலத்திற்குள் டெபாசிட் செய்யும் நபர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் தகுதியான தொகை வரவு வைக்கவில்லை என்றும் வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் அங்கீகரிக்கப்படாத மின்னணு பணிகளில் ஈடுபட்டுள்ள தொகை வரவு வைக்கவில்லை என்றும் காரணமாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இண்டஸ் இண்ட் வங்கி

இண்டஸ் இண்ட் வங்கி

அதே போல் இண்டஸ் இண்ட் வங்கிக்கும் ஒரு கோடி ரூபாய் அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இந்த வங்கியின் நிதி நிலையை குறிக்கும் வகையில் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அன்று மேற்பார்வை மதிப்பீட்டிற்கான சட்ட ஆய்வு நடத்தப்பட்டது என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு அறிக்கை

மதிப்பீடு அறிக்கை

இந்த மதிப்பீட்டு அறிக்கையின் ஆய்வு அறிக்கை வழிகாட்டலுக்கு இணங்கவில்லை என தெரிய வந்ததை அடுத்து இந்த வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஓடிபி அடிப்படையிலான e-KYC ஐப் பயன்படுத்தி, நேருக்கு நேர் பார்க்காத முறையில், ஒரு நிதியத்தில் உள்ள அனைத்து வரவுகளின் மொத்தத் தொகையைப் பயன்படுத்தி, CDD நடைமுறையை வங்கி கடைப்பிடிக்கத் தவறிவிட்டது என்றும் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கோடி அபராதம்

ஒரு கோடி அபராதம்

கோடக் மகேந்திரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட தகவல் வங்கி நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI penalties to Kotak Mahindra Bank, IndusInd Bank!

RBI penalties to Kotak Mahindra Bank, IndusInd Bank! | கோடக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் வங்கிகளுக்கு ரூ.1 கோடி அபராதம்: என்ன காரணம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.