அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்

சென்னை
:
நடிகரும்
இயக்குனருமான
பார்த்திபனின்
இரவின்
நிழல்
திரைப்படம்
ஜூலை
15-ம்
தேதி
ரிலீஸ்
செய்யப்பட
உள்ளது.’உலகின்
முதல்
சிங்கிள்
ஷாட்
நான்-லீனியர்
படம்’
என்ற
பெருமையைப்
பெற்ற
இப்படத்தில்
பார்த்திபன்,
வரலட்சுமி
சரத்குமார்,
ரோபோ
ஷங்கர்
உள்ளிட்டோர்
நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான்
இசையில்
6
பாடல்கள்
இந்த
படத்தில்
இடம்பெற்றுள்ளது.
ஆசியாவின்
முதல்
சிங்கிள்
ஷாட்
படம்
என்பதால்
ஆசியா
புக்
ஆஃப்
ரெக்கார்டில்
இரவின்
நிழல்
இடம்பிடித்துள்ளது.
இந்த
படம்
தமிழ்
மற்றும்
தெலுங்கு
மொழிகளில்
ரிலீஸ்
செய்யப்பட
உள்ளது.

பட
ரிலீசிற்கு
முன்பே
இந்த
படம்
சர்வதேச
அளவில்
மூன்று
விருதுகளை
வென்றதுடன்,மேலும்
இரண்டு
விருதுகளுக்கு
பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.

மூன்று
விருதுகளில்
இரண்டு
விருதுகள்
படத்தின்
ஒளிப்பதிவாளர்
ஆர்தர்

வில்சனுக்கும்,
ஒன்று
படத்துக்கும்
கிடைத்துள்ளது.

வில்சன்
சிறந்த
ஒளிப்பதிவாளருக்கான
விருதுகளை
Cult
Movies
International
film
Festival
மற்றும்
Oniros
Film
Awards

New
York
ஆகியவற்றில்
வென்றுள்ளார்.
அதே
நேரத்தில்
இரவின்
நிழல்
படத்துக்கான
விருது
Medusa
திரைப்பட
விழாவில்
கிடைத்துள்ளது.

நியூயார்க்
சர்வதேச
திரைப்பட
விருதுகள்
மற்றும்
ரோம்
இன்டர்நேஷனல்
மூவி
விருதுகள்
ஆகிய
இரண்டு
திரைப்பட
விருதுகளுக்கும்
இந்தத்
திரைப்படம்
அதிகாரப்பூர்வமாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
படத்தின்
இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மானைக்
கொண்டாடும்
வகையில்,
இரவின்
நிழல்
படத்தின்
இசை
முதல்
சிங்கிள்
விழாவை
பார்த்திபன்
சென்னையில்
நடத்தினார்.

மதன்
கார்க்கி
எழுதி,
ஸ்ரேயா
கோஷல்
பாடிய
மாயவா
தூயவா
என்ற
மெல்லிசைப்
பாடலைத்
தொடர்ந்து,
ஏற்கனவே
ரசிகர்களின்
பாராட்டுகளைப்
பெற்றுள்ள
பாவம்
செய்யாதிரு
மனமே
பாடலின்
லிரிக்
வீடியோவை
படக்குழு
புதன்கிழமை
காலை
வெளியிடுகிறது.
ஆஸ்கார்
விருது
பெற்ற,
Whiplash
புகழ்
கிரேக்
மான்
இந்த
படத்தின்
ஒலி
வடிவமைப்பை
செய்துள்ளார்,
மற்றொரு
அகாடமி
விருது
வென்ற
Cottalango
Leon
அதன்
VFX
மேற்பார்வையாளராக
பணியாற்றியிருப்பது
குறிப்பிடத்தக்கது.

கடுவெளி
சித்தரின்
பாடலை
டி.வி.யில்
கேட்டதாகவும்,
மிகவும்
இருட்டாகவும்,
அழுத்தமாகவும்
இருக்கும்
இரவின்
நிழல்,
படத்திற்கு
இது
சரியானதாக
இருக்கும்
என்றும்
உணர்ந்ததாக
தெரிவித்திருக்கிறார்
ஏ.ஆர்.ரஹ்மான்.
அந்தப்
பாடலை
நிரஞ்சனா
ரமணன்
மற்றும்
கீர்த்தனா
வைத்தியநாதன்
ஆகியோர்
பாடியுள்ளனர்.

இரவின்
நிழல்
படம்
50
வயது
நபர்
தனது
வாழ்க்கையைத்
திரும்பிப்
பார்ப்பதை
மையமாக
வைத்து
இயக்கப்பட்டுள்ளது.
இந்தக்
கதையை
ஒரே
ஷாட்டில்
படமாக்குவதற்காக,
64
ஏக்கர்
நிலத்தில்,
பெரிய
பட்ஜெட்டில்,
50
செட்களை
அமைத்ததாக
பார்த்திபன்
பேட்டி
ஒன்றில்
தெரிவித்திருந்தார்.

English summary
Actor-director Radhakrishnan Parthiban’s Iravin Nizhal has bagged three awards and two nominations at the global level. Out of the three awards, two have been for the film’s cinematographer Arthur A Wilson and one of the film itself. Wilson has won Best Cinematography awards at the Cult Movies International film Festival and Oniros Film Awards – New York, while the film has won at the Medusa Film Festival.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.