சென்னை : அட்லி படங்கள் என்றால் கண்டிப்பாக அதில் வரும் வசனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. பல வசனங்களை இளைஞர்கள் ரிப்பீட் மோடில் சொல்லி கொண்டு இருப்பார்கள்.
இது தொடர்பாக வசனங்களை எழுதும் ரமணன் என்கிற ராமணகிரி வாசன் தன்னுடைய அனுபங்களை சொல்லும் போது – டிவிக்கும் ,சினிமாவிற்கும் எழுதும் வித்யாசத்தை முன் வைத்தார் .
“நாம் நினைப்பதை சொல்வது சினிமா, மக்களுக்கு பிடித்ததை சொல்வது டிவி. மக்களுக்கு என்ன பிடித்திருக்கிறது, நம்ம சேனலில் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு நாம் பணியாற்றினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று Zee Tamil Television Business Head மற்றும் அட்லி படங்களின் வசனங்களை எழுதும் எழுத்தாளர் ரமணகிரி வாசன் தெரிவித்தார்.அட்லி படங்களின் வசனங்களை எழுதும் ராமணகிரி வாசன் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்
இவர்களை வழிநடத்துவது…
கேள்வி: தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிக்கரமான சீரியல் கொடுத்து கொண்டு வருகிறீர்கள். நீங்கள் எப்படி வசனம் எழுதுபவர்களை மேற்பார்வை செய்கிறீர்கள்?
பதில்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களுக்கு சிறந்த எழுத்தாளர்கள் தான் வசனம் எழுதுகின்றனர். குறிப்பாக முத்துசெல்வன், அமுதாவும் அன்னலட்சுமியும் தொடருக்கும், செம்பருத்திக்கு வசனம் எழுதிய ராஜா மாரி தொடருக்கும், மீனாட்சி பொண்ணுங்க தொடருக்கு பிரசன்னாவும் எழுதி வருகின்றனர். என்னுடைய வேலை என்னவென்றால், இவர்களை வழிநடத்துவது மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமே.

டி.ஆர்.பி டார்கெட்
கேள்வி: தொடர்ந்து உங்களால் மட்டுமே எப்படி டி.ஆர்.பி.யை தக்க வைக்க முடிகிறது ?
பதில்: Television Rating Point யை ஒரு நம்பராக பார்க்காமல், சீரியல் பார்க்கக்கூடிய மக்களாக பார்க்க வேண்டும். நாம் நினைப்பதை சொல்வது சினிமா.மேக்ஸிமம் சினிமா டைரக்டர் சாய்ஸ் தான். மக்களுக்கு பிடித்ததை சொல்வது டிவி.இங்கு பலரது கருத்துக்கள் விவாதித்த பின்னர், அவர்களுக்கு என்ன பிடித்திருக்கிறது, நம்ம சேனலில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். இதுவே டி.ஆர்.பி.யை தக்க வைத்து கொள்ள மிகவும் உதவும்.

கனெக்ட் ஆனால் மட்டுமே வெற்றி
கேள்வி: ஒரு சீரியல் வெற்றியடைய நீங்கள் என்ன முயற்சி எடுக்கிறீர்கள்?
பதில்: நான் அசிஸ்டெண்ட் தயாரிப்பாளராக தொடங்கிய எனது பணி, இன்று சீனியர் புரோகிராமராக வளர்ந்துள்ளேன். தற்போது என்னுடைய எண்ணமெல்லாம், இந்த பொறுப்பை சரியாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே. இது மிகப்பெரிய சவாலாகவும் உள்ளது. தொடர்ந்து மக்களுடைய எண்ணங்களையும், விருப்பத்தையும் கவனிக்க தவறினால் வெற்றி நமக்கு கிடைக்காது. நாம் தயாரிக்கின்ற இரண்டு தொடர்கள் வெற்றி பெற்றவுடன், நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் அடுத்த தொடரை தயாரிக்கும்பொழுது தோல்வியடைந்து விடுவோம். இந்த சம்பவம் என் வாழ்க்கையிலும் நடைபெற்றுள்ளது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டு, அவர்களுடன் கனெக்ட் ஆனால் மட்டுமே வெற்றி கிடைக்கும். ஒரு காலக்கட்டத்தில் டிவி நிறுவனத்தின் புரோமோஷனுக்கு தொலைக்காட்சி சேனல்கள் தேவைப்பட்டன. ஆனால் இன்று தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகும் தொடருக்கு புரோமோஷன் தேவைப்படுகிறது என்று சிரித்தபடி பதில் அளித்தார் ரமணன்.

மிரட்டலான வெற்றி
கேள்வி: சமீபத்தில் இயக்குநர் அட்லி படத்திற்கு நீங்கள் வசனம் எழுதியுள்ள அனுபவம் பற்றி சொல்லுங்கள்
பதில்: இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்திற்கு நான் வசனம் எழுதியுள்ளேன். இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஷாருக்கானின் வளர்ச்சி பெரிதாக இருக்கும். ஷாருக்கான் & அட்லி கூட்டணி மிரட்டலான வெற்றியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=0iNKCDa80sc இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். Zee Tamil Television Business Head ரமணகிரி வாசன் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்
sharukh khan director atlee tamil writer ramanan exclusive interview ஷாரூக்கான் இயக்குநர் அட்லீ தமிழ் திரைப்பட எழுத்தாளர் ரமணன் சிறப்பு பேட்டி