பீதியில் பிரேசில்.. 76,850 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று.. உலக அளவில் இதுவரை 6,366,189 பேர் பலி

பீதியில் பிரேசில்.. 76,850 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று.. உலக அளவில் இதுவரை 6,366,189 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.66 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன.

இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.66 லட்சத்தை தாண்டிவிட்டது.

இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,366,189 பேரை தாக்கி கொன்றுள்ளது.. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 557,207,853 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 531,260,198 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 19,581,466 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. சென்னையுடன் போட்டிபோடும் “அந்த” ஒரு மாவட்டம் தமிழ்நாட்டில் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. சென்னையுடன் போட்டிபோடும் “அந்த” ஒரு மாவட்டம்

 முதல் 3 நாடுகள்

முதல் 3 நாடுகள்

இந்த கொடூர வைரஸுக்கு எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 89,894,125 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 74,183 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,044,455 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 85,487,840 பேர் குணமடைந்து சென்றுவிட்டனர்.

மரணம் இல்லை

மரணம் இல்லை

இந்தியாவை பொறுத்தவரை, மத்திய அரசு எத்தனையோ தடுப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் வருகிறது..43,568,884 பேர் இதுவரை கொரோனாவைரஸ் தொற்றுக்கு நம் நாட்டில் பாதிப்படைந்துள்ளனர்.. 21,075 பேர் நேற்று மட்டும் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 525,270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாகவே தொற்றால் யாருமே உயிரிழக்கவில்லை.. இதுவரை 42,907,32 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

புதுவைரஸ்

புதுவைரஸ்

இந்த தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. வைரஸின் தீவிரத்தின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது… தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. ஆனாலும், இந்த வருட தொடக்கத்தில் இருந்தே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.. அதேபோல் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன… காரணம், புது வைரஸ் பரவுவதாக தகவல்கள் வருகின்றன.

உயிரிழப்பு

உயிரிழப்பு

வைரஸ் பாதிப்பில் உலகில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா 2 இடத்திலேயே பாதிப்பில் நீடித்து வருகிறது.. 3வதாக, பிரேசில் நாடு பாதிப்படைந்த நாடுகளாக இப்போதும் வருகின்றன.. இந்த நாட்டில் 32,687,680 பேர் இதுவரை அங்கு வைரஸுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 76,850 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 672,829 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. 335 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.. 31,077,538 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.

English summary
worldwide Coronavirus positive case crosses 557,207,853 and death case 6,364,028 கொரோனாதொற்று பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.