கறுப்பு கோதுமை கறுப்பு தங்கமாக கூட மாறலாம்.. பண மழை பொழிய வாய்ப்பு.. எப்படி தெரியுமா?

பொதுவாக கோதுமை உணவு என்பது மக்களுக்கு பிடித்தமான உணவு என்பதோடு, உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவாகவும் பார்க்கப்படுகிறது. ஆக கோதுமைக்கான தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக கறுப்பு கோதுமையின் தேவையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றது.

தற்போது கறுப்பு கோதுமையின் விலையானது சாதாரண கோதுமை விலையை விட 4 மடங்கு அதிகரித்துள்ளது.

கோதுமை, சர்க்கரையை அடுத்து அரிசி ஏற்றுமதிக்கும் தடையா?

விலை எவ்வளவு தெரியுமா?

விலை எவ்வளவு தெரியுமா?

கறுப்பு கோதுமை விலை குவிண்டாலும் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே சாதாரண கோதுமை விலையானது 2,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதனால் விவசாயிகள் இதனை பயிரிடுவதில் மிக்குந்த ஆர்வம் காட்டி வருகிண்றனர்.

ஏன் பெஸ்ட்?

ஏன் பெஸ்ட்?

கறுப்பு கோதுமையை பொறுத்தவரையில் மகசூல் அதிகம் கிடைக்கும். விலையும் அதிகம்.

ராபி பருவத்தில் கறுப்பு கோதுமை பயிரிடலாம், இதனை விதைப்பதற்கு நவம்பர் மாதம் சிறப்பான மாதமாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஈரப்பதம் அவசியம். நவம்பர் மாதத்திற்கு பிறகு விதைப்பை செய்தால் மகசூல் குறையலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு ஜிங்க் மற்றும் யூரியா தேவைப்படும். ஆய்வின் படி 1 பிகா நிலத்தில் 1200 கிலோ வரையில் மகசூல் கிடைக்கிறது.

 

சிறப்பம்சம் என்ன?
 

சிறப்பம்சம் என்ன?

கறுப்பு கோதுமையில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதில் அதிகளவில் அந்தோசயனின் நிறமி உள்ளது. இதன் காரணமாக இது கறுப்பு நிறத்தில் உள்ளது. வெள்ளை கோதுமையில் அயனோசயனில் 11 பிபிஎம் வரையில் இருக்கும். இதே கறுப்பு நிற கோதுமையில் 140 பிபிஎம் வரையில் உள்ளது. கறுப்பு கோதுமையில் இயற்கையான ஆக்ஸினேற்றம் மற்றும் ஆன்டிபயோடிக் அந்த்ரோசயனின் உள்ளது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

கறுப்பு கோதுமையில் மாரடைப்பு, புற்று நோய், நீரிழிவும் மன அழுத்தம், முழங்கால் வலி, இரத்த சோகை போன்ற நோய்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கறுப்பு கோதுமையிலும் பல சத்துகள் உள்ளன. இது இருப்புசத்து நிறைந்தது மற்றும் புற்று நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளவும்

இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளவும்

கறுப்பு கோதுமை பயிர் சாதாரண கோதுமை போன்றது. ஆனால் கறுப்பு கோதுமைகளை விதைப்பதற்கு பயிற்சி தேவை என கூறப்படுகிறது. வேளாண் வல்லுனர்கள், கறுப்பு கோதுமையில் வருமானம் ஈட்ட சிறந்த வழியாக இருக்கோம். குறிப்பக டயாபெடீஸ் உள்ளவர்காளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Black wheat can turn into black gold? Do you know how?

Black wheat can turn into black gold? Do you know how?/கறுப்பு கோதுமை கறுப்பு தங்கமாக கூட மாறலாம்.. பண மழை பொழிய வாய்ப்பு.. எப்படி தெரியுமா?

Story first published: Thursday, July 7, 2022, 16:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.