சிறுநீரக கல் பிரச்சினையால் அவதியா? இதனை கரைக்க இதோ சில எளிய வழிகள்


பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

மிகச் சிறிய படிவங்கள் தேங்கி, கற்களாக உருவாகி சிறுநீரகத்தில் தங்கிவிடுகின்றன. இது வலியை ஏற்படுத்தாதவரை யாரும் இதை கண்டுபிடிப்பது இல்லை.

சிறுநீரகத்தில் கல் இருந்து, அது சிறுநீர்ப்பாதை வழியாக நகர்ந்து வெளியேறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. இது சிறுநீர் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் வலி கடுமையாகும்.

சிறுநீரக கற்கள் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் என்றாலும், வீட்டு முறை சிகிச்சைகளில் இதை கரைக்க முடியும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

சிறுநீரக கல் பிரச்சினையால் அவதியா? இதனை கரைக்க இதோ சில எளிய வழிகள் | Suffering From Kidney Stone Problem

  • நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்க முடியும்.
  •  நாம் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் தான் நமது சிறுநீரகங்கள் அசுத்தங்களை வெளியேற்ற முடியும். ஆகவே, சராசரியாக ஒரு ஆண் நாளொன்றுக்கு 3.7 லிட்டர் தண்ணீரும், ஒரு பெண் 2.7 லிட்டர் தண்ணீரும் அருந்துவது அவசியமாகும்.
  • மாதுளம் பழச்சாறு எடுத்துக் கொள்ளும்போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவது தடுக்கப்படுகிறது. சிறுநீரின் அசிடிட்டி அளவையும் இது குறைக்கிறது.
  • நமது சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றி, சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் தன்மை ராஜ்மா விதைகளில் இருக்கிறது.
  • சீமை காட்டு முள்ளங்கி ஜூஸ் அருந்துவதும் சிறுநீரக கற்களை வெளியேற்றுவதற்கு உதவும்.
  • கோதுமைப்புல் ஜூஸ் என்பது நம் உடலுக்கு நன்மை அளிப்பதாகவும். சிறுநீரை இது பெருக்கும். ஆகவே சிறுநீரக கற்கள் வெளியேற உதவியாக இருக்கும்.
  • கிரீன் டீ என்பதும் கால்சியம் ஆக்ஸலேட் கொண்டது என்றாலும் இதன் மூலமாக சிறுநீரக கற்கள் உருவாகாது. ஆகவே, தினசரி கிரீன் டீ அருந்தினால் சிறுநீரக கற்களை வெளியேற்ற முடியும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.