தமிழகத்தின் இந்த பகுதிகளில் 2+1 நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.!

வருகிற 9-ந் தேதி தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 12-ந் தேதி எண்ணப்பட உள்ளது. இதன் காரணமாக, இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இன்று இரவு முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. 

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், “கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். நாளுக்கு முன்னதாக இன்று (7-ந் தேதி) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 9-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரையிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். 

மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந் தேதியும் மூடப்பட்டிருக்க வேண்டும். வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமையப்பெற்ற சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.