வெயாங்கொட, களுத்துறை நகரங்களுக்கு இடையில் அடிக்கடி பயணிக்கக்கூடிய ரயில் சேவை

ரயில்வே துறையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனெவிரட்ன தெரிவித்துள்ளார்.

வெயாங்கொட, களுத்துறை நகரங்களுக்கு இடையில் அடிக்கடி பயணிக்கக்கூடிய ரயில் ஒன்று விரையில் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கிறது.

பல்வேறு பகுதிகளிலும் இரட்டை ரயில் பாதைகள் காணப்பட்டாலும், சில இடங்களில் ஒன்றை வழி ரயில் பாதை மாத்திரமே காணப்படுவதாகவும், இதனால், புதிய ரயில்களை சேவையில் ஈடுபடுத்தும் போது, நெரிசல்நிலை ஏற்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் தற்சமயம் கூடுதலாக ரயில்களை பயன்படுத்துவதால், அலுவலக ரயில்களில் அதிக நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், சில பயணிகள் ரயில்களிலிருந்து விபத்துக்குள்ளான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ,

ரயில்வே திணைக்களம் குறைந்த வளங்களை கொண்டு, உயர்ந்தபட்ச பயன்களை அடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.