15 வயது இந்திய மாணவனுக்கு அமெரிக்காவில் வேலை, ரூ.33 லட்சம் சம்பளம்.. ஆனால் துரத்திய துரதிர்ஷ்டம்

15 வயது இந்திய மாணவனுக்கு அமெரிக்காவில் வேலை, ரூ.33 லட்சம் சம்பளம்.. ஆனால் துரத்திய துரதிஷ்டம்

10ஆம் வகுப்பு படித்து வரும் இந்திய மாணவனுக்கு அமெரிக்காவில் ரூபாய் 33 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மாணவனின் வயது காரணமாக வேலைவாய்ப்பு திரும்ப பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த மாணவனுக்கு தகுந்த வயது வந்தவுடன் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!

15 வயது மாணவர்

15 வயது மாணவர்

15 வயது நாக்பூர் நகரை சேர்ந்த வேதாந்த் என்ற மாணவருக்கு டியோகேட் திறமை காரணமாக நம்மில் பெரும்பாலோர் கனவு காணக்கூடிய வேலை வாய்ப்பை அமெரிக்காவில் பெற்றார். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு விளம்பர நிறுவனம், இணையதள மேம்பாட்டுப் போட்டி நடத்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வேதாந்த், ஆண்டுக்கு ரூ. 33 லட்சம் சம்பளப் பேக்கேஜ் உடன் வேலை வழங்கப்படும் என அமெரிக்க நிறுவனம் அறிவித்தது.

போட்டியில் பங்கேற்பு

போட்டியில் பங்கேற்பு

சமூக ஊடகங்களில் உலாவும்போது டியோகேட் போட்டி வாய்ப்பை கண்ட வேதாந்த், கோவிட்-19 ஊரடங்கின்போது கோடிங் முறை மற்றும் மென்பொருள் மேம்பாட்டை கற்றுக்கொண்ட அவர், போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார். அவர் வீடியோக்களை பார்க்கவும் பதிவேற்றவும் மற்றும் வலைப்பதிவை இடுகையிடவும் பயனர்களை அனுமதிக்கும் வலைத்தளத்தை உருவாக்கினார்.

 போட்டியில் வெற்றி
 

போட்டியில் வெற்றி

அமெரிக்க நிறுவனம் அவரது பணியால் மிகவும் ஈர்க்கப்பட்டதால், உடனடியாக தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வேலையை அவருக்கு வழங்கியது. உலகம் முழுவதிலுமிருந்து 1,000 பேர் அடங்கிய குழுவில் இருந்து வேதாந்த் டியோகேட் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெற்றோர் திகைப்பு

பெற்றோர் திகைப்பு

வேதாந்த் அமெரிக்க நிறுவனத்திடமிருந்து வேலைவாய்ப்பு குறித்த மின்னஞ்சலை பெற்றவுடன் குழப்பமடைந்தார். அவரது தந்தை ராகேஷ் தியோகேட் வேதாந்தின் ஆசிரியர்களிடம் இதுகுறித்து கூறினார். ஆசிரியரும் அதனை ஆய்வு செய்து வேலைவாய்ப்பு உண்மையானது என தெரிவித்ததும் வேதாந்த் பெற்றோர்கள் திகைத்து போனார்கள்.

விளையாடிய துரதிர்ஷ்டம்

விளையாடிய துரதிர்ஷ்டம்

உடனடியாக ராகேஷ் தியோத் தனது மகனுக்கு வேலை கொடுத்த அமெரிக்க நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். அதில் தனது மகன் 10ஆம் வகுப்பு படிப்பதாகவும் அவருக்கு 15 வயதுதான் என்பதையும் குறிப்பிட்டார். இங்குதான் துரதிர்ஷ்டம் திடீரென விளையாடியது. வேதாந்தின் வயது தெரியவந்ததையடுத்து அந்த நிறுவனம் அந்த வேலைவாய்ப்பை திரும்ப பெற்றதாக தெரிகிறது.

வேலைக்கு மீண்டும் வாய்ப்பு

வேலைக்கு மீண்டும் வாய்ப்பு

இருப்பினும் வேதாந்தின் டியோகேட்டின் தொழில்முறையை பாராட்டிய அமெரிக்க நிறுவனம், அவர் தனது படிப்பை முடித்த பிறகு மீண்டும் வேலைக்கு விண்ணப்பிக்க பரிந்துரைத்தது. இதனால் மாணவரின் பெற்றோர் மீண்டும் உற்சாகம் அடைந்து தங்களது மகனுக்கு உரிய வயது வந்ததும் அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

தாயார் பெருமிதம்

தாயார் பெருமிதம்

இதுகுறித்து வேதாந்த் தாயார் அஸ்வினி கூறுகையில், கல்வியில் கவனம் செலுத்துமாறு தான் எப்போதும் தனது மகனிடம் கேட்டு கொள்வேன் என்றும், அவரது ஆசிரியர்கள் மற்றும் முதல்வர் அவரை ஒரு திறமையான குழந்தை என்று சொல்வது எனக்கு பெருமையாக உள்ளது என்றும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian student aged15, got Rs.33 lakh job offer from USA, But withdrew the offer!

Indian student aged15, got Rs 33 lakh job offer from USA, But withdrew the offer! | 15 வயது இந்திய மாணவனுக்கு அமெரிக்காவில் வேலை, ரூ.33 லட்சம் சம்பளம்.. ஆனால் துரத்திய துரதிஷ்டம்

Story first published: Monday, July 25, 2022, 7:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.