Telecom: ரூ.200க்கும் குறைவான ஏர்டெல் ரீசார்ஜ்கள் திட்டங்கள்!

Airtel recharge plans under 200: ஏர்டெல் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறது. ரிலையன்ஸ் ஜியோவில் மிகப் பெரிய பயனர்கள் இருந்தபோதிலும், ஏர்டெல் அதனுடன் பெரும் போட்டியைச் சந்தித்து வருகிறது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நிறுவனம் ஒன்றுக்கும் மேற்பட்ட அற்புதமான திட்டங்களை வழங்குகிறது. ஏர்டெல் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான திட்டங்களைக் கொண்டுள்ளது.

மேலதிக செய்தி:
Gmail Tips: மின்னஞ்சல்களை கொத்தாக அழிக்க வேண்டும் – ரொம்ப சிம்பிளா செய்யலாம்!

ஆனால், இன்னும் பல பயனர்கள் மலிவான விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களைத் தேடுகின்றனர். நீங்களும் ஏர்டெல் பயனராக இருந்தால், இன்று நாங்கள் உங்களுக்கு ஏர்டெல்லின் 3 ரீசார்ஜ் திட்டங்களை குறித்து சொல்லப் போகிறோம். சுமார் ஒரு மாதம் செல்லுபடியாகும் இந்த திட்டங்களின் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஏர்டெல் ரூ.155 ரிசார்ஜ் திட்டம் (Airtel 155 plan details)

இந்த ஏர்டெல் திட்டம் 24 நாள்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. திட்டத்தில் மொத்தம் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். இதை 24 நாள்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலதிக செய்தி:
கூகுள் பிக்சல் 6ஏ போன் இந்திய வெளியீடு – Pixel போன்கள் விலையை ஏன் Google உயர்த்துகிறது?

இது வரம்பற்ற அழைப்புடன் மொத்தம் 300 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. பயனர்கள் இலவச ஹலோ ட்யூன்ஸ், விங்க் மியூசிக்கிற்கான இலவச அணுகலை இதில் பெறுவார்கள்.

ஏர்டெல் ரூ.179 ரீசார்ஜ் திட்டம் (Airtel 178 plan details)

ஏர்டெல்லின் ரூ.179 திட்டம் 28 நாள்களுக்கு செல்லுபடியாகும். இந்த ஏர்டெல் திட்டமானது 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது ரூ.155 திட்டத்தை விட இரட்டிப்பாகும். இது வரம்பற்ற அழைப்புடன் மொத்தம் 300 எஸ்எம்எஸ்-ஐ வழங்குகிறது. கூடுதலாக, ஹலோ ட்யூன்ஸ், Wynk Music-கான இலவச அணுகலை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.209 ரீசார்ஜ் திட்டம் (Airtel 209 plan details)

இந்த திட்டத்தின் விலை ரூ.209 ஆகும். ஆனால் இது அதிக நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில், ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டமானது 21 நாள்கள் செல்லுபடியாகும்.

மேலதிக செய்தி:
Twitter: ட்விட்டர் கணக்குகள் சூறையாடல்; பயனர் தரவுகளை விற்பனைக்குக் கொண்டு வந்த ஹேக்கர்!

இதன் மூலம் மொத்தம் 21 ஜிபி டேட்டாவை பயனர்கள் பெற முடியும். இதனுடன் நீங்கள் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், Hello tunes, விங்க் மியூசிக் இலவச அணுகலைப் பெறுவீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.