“இந்தியாவுடன் பாகிஸ்தான், வங்காள தேசத்தை இணைப்பது சாத்தியம்!" – சொல்கிறார் ஹரியானா முதல்வர்

இந்தியாவுடன் வங்க தேசத்தையும், பாகிஸ்தானையும் இணைப்பது சாத்தியம் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. ஹரியானா மாநிலம், குருகிராமில் பா.ஜ.க-வின் தேசிய சிறுபான்மை மோர்ச்சாவின் மூன்று நாள்கள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அதில் ஹரியானாவின் பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “1991-ல் மக்கள் பெர்லின் சுவரை உடைத்து கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனியை இணைத்தது சாத்தியமானது. அதே போல, பாகிஸ்தான், வங்காள தேசத்தை இந்தியாவுடன் இணைப்பதும் சாத்தியமாகும். 1947-ம் ஆண்டு நாட்டில் நடந்த பிரிவினை வேதனைக்குரியது.

பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார்

மேலும், அந்தப் பிரிவினை மத அடிப்படையில் செய்யப்பட்டது. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பயத்தையும், பாதுகாப்பின்மை உணர்வைவும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களுக்கு `சிறுபான்மையினர்’ என்ற குறிச்சொல் வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்-ன் பயத்தைக் காட்டி சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற உணர்வை பெரும் பழைய கட்சியான காங்கிரஸ் உருவாக்கியிருக்கிறது. ஆனால் மக்கள் இப்போது காங்கிரஸின் சித்தாந்தத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றனர். சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் சிறுபான்மையினரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தியது” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.