இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் திணறல் – இன்று 3-வது நாள் ஆட்டம்

காலே,

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், இலங்கையின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். முந்தைய டெஸ்டின் ஹீரோ அப்துல்லா ஷபிக் டக்-அவுட் ஆனார். கேப்டன் பாபர் அசாம் 16 ரன்னிலும், துணை கேப்டன் முகமது ரிஸ்வான் 24 ரன்னிலும் வெளியேறினர்.

அதிகபட்சமாக அஹா சல்மான் 62 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 69.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. ரமேஷ் மென்டிஸ் 3 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டும் சாய்த்தனர். இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.