கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பு என எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர்


கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் எலான் மஸ்குக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியான நிலையில் அது குறித்து மஸ்க் விளக்கமளித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான செர்ஜி பிரின், தனது மனைவி நிக்கோல் ஷனாஹனிடம் இருந்து விவாகரத்து கோரி சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஊடகம் ஒன்று, கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரினின் மனைவி நிக்கோல் ஷனாஹனுக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரருமான எலான் மஸ்குக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் செர்ஜி பிரின் தனது மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் செய்தி வெளியிட்டது.

கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பு என எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் | Musk Denies Affair With Google Co Founder Wife

Image: Press Agency/NurPhoto/Shut

இந்த செய்தி சர்வதேச அளவில் பேசும் பொருளாக மாறியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக மஸ்க் தெரிவிக்கையில், இது ஒரு பொய்யான செய்தி. செர்ஜியும் நானும் நண்பர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் செர்ஜி மனைவியை இரு முறை தான் சந்தித்துள்ளேன்.
அதுவும் மற்றவர்கள் முன்னிலையில் தான் சந்தித்தேன். எங்களுக்குள் எந்தவிதமான தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். 

கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பு என எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் | Musk Denies Affair With Google Co Founder Wife



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.