சீனா-வை நெருங்கும் இந்தியா.. 2 மடங்கு வளர்ச்சி..!

ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சீனா தான் முன்னணியில் இருந்து வருகின்றது. எனினும் சீனாவினை தொடர்ந்து தற்போது இந்தியா குறிப்பிட்ட துறைகளில் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் 2022ம் நிதியாண்டில் இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

சொல்லப்போனால் தற்போது சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அசத்தும் ஈரோடு தம்பதி.. ஆட்டுபால் மூலம் சோப்பு.. இன்னும் பல ஸ்கின் கேர்.. லட்சக்கணக்கில் வருமானம்!

இருமடங்கு வளர்ச்சி

இருமடங்கு வளர்ச்சி

கடந்த 2022ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவின் மொபைல்போன் உற்பத்தி மதிப்பானது 5277 கோடி ரூபாய் மதிப்பில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2021ம் நிதியாண்டில் வெறும் 2334 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இதுவே 2020ல் 2485 கோடி ரூபாயாகவும் இருந்தது. இது மத்திய அரசின் பி எல் ஐ திட்டத்தினை அடுத்து இந்த அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

வேகமாக வளர்ந்து வரும் துறை

வேகமாக வளர்ந்து வரும் துறை

பி எல் ஐ திட்டத்தின் மூலம் இந்தியாவில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் மொபைல் போன் உற்பத்தியும் ஒன்று. இதன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக இந்திய உருவெடுத்துள்ளது என்றும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பி எல் ஐ திட்டத்தின் மூலம் சலுகை
 

பி எல் ஐ திட்டத்தின் மூலம் சலுகை

மத்திய அரசு மொபைல் பொன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தியாளர்களுக்கு பி எல் ஐ திட்டத்தின் மூலம் 4 – 6% சலுகைகள் அளிப்பதால், இது உற்பத்தியாளர்கள் மத்தியில் நல்லதொரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அதோடு இந்தியாவின் உற்பத்தி விகிதத்தினையும் அதிகரித்துள்ளது.

எத்தனை பேருக்கு அனுமதி

எத்தனை பேருக்கு அனுமதி

பி எல் ஐ திட்டத்தின் மூலம் இந்திய அரசு சுமார் 10 மொபைல் போன் உற்பத்தியாளர்கள் மற்றும் 6 மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எவ்வளவு உற்பத்தி

எவ்வளவு உற்பத்தி

இந்தியா கடந்த 2020 – 21ல் 300 மில்லியன் மொபைல் போன்களை உற்பத்தி செய்துள்ளது. இதே கடந்த 2014 – 15ல் 60 மில்லியன் ஆக இருந்தது என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது 2024ல் 400 மில்லியனை எட்டும் என்றும் டெலாய்ட் சமீபத்திய அறிக்கையில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

5ஜி பங்கு

5ஜி பங்கு

5ஜிக்களுக்கான தேவை என்பது பெரியளவில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக 2026ல் மட்டும் சுமார் 80% சாதங்களில் 5ஜி பங்களிக்கலாம் என்றும் ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. உள் நாட்டில் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் இறக்குமதியானது 33% குறைந்துள்ளது என கிரிசில் அறிக்கை தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு பிரச்சனை

சீனாவுக்கு பிரச்சனை

நிச்சயம் இது போட்டி நாடான சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றே கூறலாம். ஏனெனில் இனி வரும் காலத்தில் நிச்சயம் சீனாவில் இருந்து உற்பத்தி குறைய இது வழிவகுக்கலாம். இது மொபைல் போன் உற்பத்தியில் மட்டும் அல்ல, ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் பங்கீடு என்பது அதிகரிக்கலாம். இது சீனாவுக்கு பாதகமாகவும் அமையக்கூடும். சீனா மட்டும் அல்ல, படிப்படியாக மற்ற நாடுகளில் இருந்தும் இந்தியாவின் இறக்குமதியினை குறைக்க வழிவகுக்கலாம்.

இறக்குமதி சரிவு

இறக்குமதி சரிவு

கடந்த 2022ம் நிதியாண்டிலே சீனாவில் இருந்து முந்தைய ஆண்டினை காட்டிலும் இறக்குமதி 37% சரிவினைக் கண்டுள்ளது. இதே வியட்னாமில் இருந்து 21% குறைந்துள்ளது. எனினும் தென் கொரியாவில் இருந்து 186% வளர்ச்சி கண்டும், நெதர்லாந்தில் இருந்து 512% வளர்ச்சி கண்டும் உள்ளது. எனினும் தென் கொரியாவின் பங்கு மொத்த இறக்குமதியில் 15%மும், நெதர்லாந்தில் 1% மட்டுமே கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

india becomes 2nd largest mobile producers globally

india becomes 2nd largest mobile producers globally/சீனா-வை நெருங்கும் இந்தியா.. 2 மடங்கு வளர்ச்சி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.