தினேஷ் கார்த்திக் பெயரை கூறி கத்திய ரசிகர்கள்! கைகூப்பி நிறுத்த சொன்ன முரளி விஜய்..வைரலாகும் வீடியோ



டிஎன்பிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் முரளி விஜய்யை வெறுப்பேற்றும் விதமாக கத்திய வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய், தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், போட்டி ஒன்றில் முரளி விஜய் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் பலர் ‘DK.. DK..’ கூச்சலிட்டனர்.

முரளி விஜய்யை வெறுப்பேற்றுவதற்காகவே தினேஷ் கார்த்திக்கின் பெயரை அவர்கள் DK கூறி கத்தினர்.

ஆனாலும் முரளி விஜய் சிரித்த முகத்துடன் கைகூப்பி ரசிகர்களிடம் கூச்சலிடுவதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதாவை தான் முரளி விஜய் திருமணம் செய்துள்ளார்.

மேலும், தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து தனக்கான வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்.

ஆனால், முரளி விஜய் உள்ளூர் போட்டிகளில் தான் விளையாடி வருகிறார்.

சொந்த வாழ்க்கை காரணமாக தினேஷ் கார்த்திக்கின் ரசிகர்கள் முரளி விஜய் மீது அதிருப்தியில் இருப்பதால் இவ்வாறு கூச்சலிட்டுள்ளனர் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ ரசிகர் ஒருவர் பகிர, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.