பாஜக ஆளும் குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 18 பேர் மரணம் : 20 பேர் கவலைக்கிடம்

கமதாபாத்

முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்து 20 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்தியாவில் முழு மதுவிலக்கு உள்ள மாநிலம் பாஜக ஆளும் குஜராத் மாநிலம் ஆகும்.   அதே வேளையில் இங்குக் கள்ளச்சாராயம் மற்றும் மதுக் கடத்தல் குற்றங்களும் பெருமளவில் நடைபெறுகிறது என்பதும் உண்மையாகும்.   அவ்வகையில் அகமதாபாத் அருகில் உள்ள கிராமங்களில் தற்போது கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இம்மாநிலத்தின் ததுகா வட்டத்தில் உள்ள சிற்றூர்களில் இருந்து கூலித் தொழிலாளர்கள் பக்கத்து ஊருக்குச் சாராயம் குடிக்கச் சென்றுள்ளனர்   அவ்வாறு சாராயம் குடித்ஹ்ட ஓரிரு மணி நேரத்தில் பலருக்கும் உடல்நலம் பாதிப்பு உண்டாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் இதுவரை 18 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போடு சுமார் 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இவர்கள் அருந்திய சாராயத்தில் ஏதேனும் தடை செய்யப்பட்ட இரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணை நடைபெற்று  வருகிறது.   குறிப்பாக மெதில் ஆல்கஹால் என்னும் கெமிகல் கலக்கப்படும் போது அதை அருந்தினால் கண்பார்வை பறி போகாலம் எனவும் மூளைச்சாவு நிகழலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.