பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழப்பு; 20 பேர் கவலைக்கிடம்!!

அகமதாபாத் : பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 கிராமவாசிகள் மரணம் அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் போடாட், அகமதாபாத் ஒட்டியுள்ள கிராமங்களில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்துகாதாலுகாவைச் சேர்ந்த Aakru, Aniyari, Oonchdi என்ற கிராமங்களில் இருந்து கூலி தொழிலாளர்கள் போடாட் மாவட்டத்தில் உள்ள Nabhoi என்ற பக்கத்து கிராமத்திற்கு சாராயம் குடிக்கச் சென்றுள்ளனர். குடித்த ஓரிரு மணி நேரத்தில் பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சொந்த வீடுகளில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தனர். உயிருக்கு போராடியவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இதுவரை 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழை தொழிலாளர்கள் குடித்த நாட்டு சாராயத்தில் ஏதேனும் வேதிப் பொருள் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளனர். எரிசாராயம் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் குடித்தால் கண் பார்வை பறிபோதல், மூளைச் சாவு அடைதல் நிகழலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மரணம் அடைந்த 18 பேருக்கும் இது போன்ற எந்த அறிகுறியும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. கள்ளச்சாராயத்திற்கு குஜராத்தில் 18 பேர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.