சீனா-வை விட்டு வெளியேறும் 60 பில்லியன் டாலர்.. திக்குமுக்காடி நிற்கும் ஜி ஜின்பிங் அரசு..!

கொரோனாவின் வருகைக்கு பிறகு சீனா பற்பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக பல பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.

சீனாவில் ஜீரோ கொரோனா பாலிசியின் காரணமாக பல பில்லியனர்கள் சீனாவினை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த மாதம் ஷாங்காய் அடிப்படையாக கொண்ட பில்லியனரான யிமெங் ஹூவாங், கேமிங் நிறுவனமான எக்ஸ்டியின் தலைமை நிர்வாக அதிகாரியும், தலைவருமான யிமெங் தனது குடும்பத்தினருடன் சீனாவினை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.

ரஷ்யா – சீனா இனி அசைக்க முடியாது.. சைபீரியா டூ ஷாங்காய்.. விளாடிமிர் புதின் செம ஹேப்பி..!

ஜின்பிங் அரசுக்கு சிக்கல்

ஜின்பிங் அரசுக்கு சிக்கல்

சீனாவின் இருந்து தொடர்ந்து பல முக்கிய வணிகர்கள் வெளியாகும் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இதுவும் ஜின்பிங் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதிl யிமெங் மட்டும் அல்ல, பல கோடீஸ்வரர்களும்,
யிமெங் போல வெளியேற திட்டமிட்டு வருகின்றனராம். இது சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசியினை சகித்து கொள்ள முடியாமல், வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.

 நிறுவனங்கள் வெளியேற்றம்

நிறுவனங்கள் வெளியேற்றம்

சீனாவின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பல வெளி நிறுவனங்கள் சீனாவினை விட்டு வெளியேறி வருகின்றன. பலவும் திட்டமிட்டு வருகின்றன. இதில் டெஸ்லா போன்ற நிறுவனங்களும் அடங்கும். இதனால் சீன தொழிலாளர்கள் சிக்கலில் சிக்கியுள்ளனர். இதனால் அடிப்படை ஆதரங்களுக்கே கூட கஷ்டப்படும் நிலை உள்ளது.

10,000 க்கும் பேர் அதிரடி திட்டம்
 

10,000 க்கும் பேர் அதிரடி திட்டம்

சுமார் 10,000 அதிகமான அதிக சொத்து மதிப்பினை கொண்ட சீனர்கள், சீனாவை விட்டு வெளியேற திட்டமிட்டுவதாகவும் கூறப்படுகின்றது. இதன் மூலம் 48 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளும் வெளியேறலாமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவின் முக்கிய தொழில் நகரமான ஹாங்காங்கில் இருந்து மட்டும் 3000 பேர் வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சீனா பாஸ்போர்ட்

சீனா பாஸ்போர்ட்

பார்ச்சூன் அறிக்கையின் படி, சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 10% பேரிடம் பாஸ்போர்ட் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களில் இடம் மாற்றம் செய்ய 3 – 5 மடங்கு ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி வெளியேறுபவர்கள் அதிகளவில் அமெரிக்கா, லண்டன், கனடா போன்ற இடங்களுக்கு அதிகளவில் செல்வதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் வளர்ச்சி

சீனாவின் வளர்ச்சி

சீன பொருளாதார வளர்ச்சியும் 2வது காலாண்டில் 0.4% மட்டுமே வளர்ச்சி கண்டது. இதற்கிடையில் வேலையின்மை விகிதம் இளைஞர்கள் மத்தியில் 18% ஆக அதிகரித்துள்ளது. இது பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டு வருகின்றது என்பதற்கு சிறந்த சான்றாகவும் பார்க்கப்படுகிறது.

வீசாட் தேடல் என்ன சொல்கிறது?

வீசாட் தேடல் என்ன சொல்கிறது?

சமூக வலைதளமான வீசாட் அறிக்கையின் படி, கனடாவுக்கு செல்வது எப்படி என்ற தேடல் 3000% அதிகரித்துள்ளதாக CFR தரவு கூறுகின்றது. இதே மற்றொரு கருத்துக் கணிப்பில் 23% பேர் தங்களின் முதலீடுகளை சீனாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.

கட்டுப்படுத்தலாம்

கட்டுப்படுத்தலாம்

எனினும் சீனாவினை விட்டு வெளியேறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல, அதிகரித்து வரும் பணவீக்கம், பொருளாதார மந்தம், கொரோனா கட்டுப்பாடுகள் என பல காரணிகளுக்கு மத்தியில், சீனா முதலீடுகளை அவ்வளவு எளிதில் வெளியில் அனுப்பாது என்றும் கூறப்படுகிறது. இதில் கடுமையான கட்டுபபாடுகளை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் கட்டுப்பாடுகள்

கடும் கட்டுப்பாடுகள்

ஒவ்வொரு ஆண்டும் சீன யுவானை மற்ற வெளி நாட்டு நாணயங்களாக , 50000 டாலர்களுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்குகிறது. ஆக நாட்டிற்கு வெளியேயும்,. உள்ளேயும் பணத்தை நகர்த்துவது கடினம்.

இதற்கிடையில் பாஸ்போர்ட் விதிகளிலும் சீனா ஏற்கனவே கடுமையான விதிகளை கொண்டுள்ள நிலையில், புதுபித்தல்கள் என பல சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Billionaires Plan to Leave China With Their $60 Billion Assets?

Billionaires Plan to Leave China With Their $60 Billion Assets?/சீனா-வை விட்டு வெளியேறும் 60 பில்லியன் டாலர்.. திக்குமுக்காடி நிற்கும் ஜி ஜின்பிங் அரசு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.