கடந்த அமர்வில் தான் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்பட்டாலும் உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 5000 ரூபாய்க்கு மேலாக சரிந்துள்ளது. இது இனியும் குறையுமா? வட்டி விகிதம் அதிகரித்தால் இனியும் விலை குறையலாமே என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
எதிர்பார்ப்பினை போலவே அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக இன்று தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது.
எனினும் தங்கம் விலையானது இப்படியே மீண்டும் அதிகரிக்குமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
உச்சத்தில் இருந்து ரூ.5000 சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு நாட்களில் தெரியுமா.. இனி குறையுமா?

தேவை சரிவு
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக இரண்டாவது காலாண்டில் 8% குறைந்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனை காரணமாக தங்கம் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து உச்சம் எட்டியது. இது தொடர்ந்து பணவீக்கமும் அதிகரித்து வந்தது, இன்னும் விலையை அதிகரிக்க காரணமாக அமைந்தது.

வட்டி அதிகரிப்பு
எதிர்பார்த்தைபோலவே அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் சரிய ஆரம்பித்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதம் மற்றும் பத்திர சந்தை ஏற்றம் காரணமாக, இது இன்னும் விலை குறைந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு, தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது.

தேவை இனியும் சரியலாம்
தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பானது தங்கத்தின் தேவையினை இனியும் குறைக்கலாம். இது மேற்கோண்டு வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் பட்சத்தில் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். தேவையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

பணவீக்கம்
தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை, உணவு பொருள் விலை என பலவும் பணவீக்கத்தினை தூண்டலாம். இது தங்கம் விலையினை பெரியளவில் சரிய விடாமல் தடுக்கலாம். இது தங்கம் விலை ஏற்றம் காண வழிவகுக்கலாம்.
குறிப்பாக தங்கத்தின் முக்கிய நுகர்வோரான சீனா மற்றும் இந்தியாவில் தேவை குறையலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. எப்படியிருப்பினும் அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 15 டாலர்கள் அதிகரித்து, 1734.15 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல வெள்ளி விலையும் 3.13% அதிகரித்து, 19.180 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே அதிகரித்துள்ள நிலையில், இது இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராம், 172 ரூபாய் அதிகரித்து, 50,892 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 1164 ரூபாய் அதிகரித்து, 56,008 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டுமே ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 4767 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து, 38,136 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 34 ரூபாய் அதிகரித்து, 5200 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,600 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 1.20 ரூபாய் அதிகரித்தே, 61.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 612 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1200 ரூபாய் அதிகரித்து, 61,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.47,670
மும்பை – ரூ.46,800
டெல்லி – ரூ.46,950
பெங்களூர் – 46,850
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.47,670
gold price on 28th June 2022: global gold demand falls as investors shy away
gold price on 28th June 2022: global gold demand falls as investors shy away/நடுத்தர மக்கள் கவலை.. இன்று தங்கம் விலை என்ன தெரியுமா.. இனி வாங்குறது கஷ்டம் தான்!