கனடாவில் 48 மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்வார் என கூறப்பட்ட இளைஞருக்கு பெண்ணால் காத்திருந்த சர்ப்ரைஸ்!


கனடாவில் 48 மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்ட இளைஞர் இறப்பதற்குள் பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்டார்.

நோவா ஸ்கோடியாவில் தான் இந்த நெகிழவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
35 வயதான பில்லி பர்கோய்ன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இடையில் அது குணமானது.

பின்னர் மீண்டும் பில்லிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் பில்லியிடம் கூறுகையில், புற்றுநோயுடன் உங்கள் நீண்ட போராட்டம் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது.
ஏனெனில் நீங்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டுமே உயிர் வாழ்வீர்கள் என தெரிவித்தனர்.

கனடாவில் 48 மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்வார் என கூறப்பட்ட இளைஞருக்கு பெண்ணால் காத்திருந்த சர்ப்ரைஸ்! | Canada Man48 Hours Left To Live Married Girl

Submitted by Jillian Tibert

இதையடுத்து 17 ஆண்டுகளாக பில்லியை காதலித்து வந்த நிகிதா சர்ப்ரைஸ் தரும் விதமாக அவரை மணக்க விரும்பினார். இது குறித்து இருவரும் மனம் ஒத்து முடிவு செய்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் சூழ பில்லி – நிகிதா திருமணம் நடைபெற்றது.

ஆனால் திருமணம் முடிந்து 4 நாட்கள் வரை உயிருடன் இருந்த பில்லியின் உயிர் கடந்த 20ஆம் திகதி அவரது வீட்டில் அமைதியான முறையில் பிரிந்தது.
இது குறித்து நிகிதா கூறுகையில், எங்கள் திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் அதிகளவில் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது.

மீன் பிடிப்பதில் பில்லிக்கு அதிகம் ஆர்வம் இருந்தது. இறப்பதற்கு சில மணி நேரம் முன்னர் கூட சென்று மீன் பிடித்தார்.
எங்கள் திருமணத்தின் போது எழுந்து நின்று அவரால் முத்தம் கூட கொடுக்க முடியவில்லை, கால்கள் செயலிழந்தது போன்று அவர் இருந்தது எனக்கு வேதனையளித்தது, இருந்த போதிலும் பில்லி எனக்கு கடைசி முத்தமிட்டார்.

பில்லி பற்றிய நினைவுகள் என்றும் என் மனதில் இருந்து மறையாது என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

கனடாவில் 48 மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்வார் என கூறப்பட்ட இளைஞருக்கு பெண்ணால் காத்திருந்த சர்ப்ரைஸ்! | Canada Man48 Hours Left To Live Married Girl

Facebook



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.