தி லெஜண்ட் படத்தை 1,262 இணையதளத்தில் வெளியிட தடை

பிரபல ஜவுளிக்கடை அதிபர் அருள் சரவணன் நடித்துள்ள படம் ‛தி லெஜண்ட்'. இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி உள்ளனர். படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளதால், படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 'தி லெஜண்ட்' திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு 1,262 இணையதளங்களுக்கும், இணையதள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.