பொதுமக்கள் நலனில் அக்கறை… கருத்துக்கணிப்பில் மீண்டும் ரிஷி சுனக் சறுக்கல்


பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டவர் லிஸ் டிரஸ் என சுமார் 40% கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளதால், ரிஷி சுனக் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

குறித்த கேள்விக்கு 18% கட்சி உறுப்பினர்கள் மட்டுமே ரிஷி சுனக் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
தனியார் செய்தி ஊடகம் ஒன்று முன்னெடுத்த நேரலை விவாதம் மற்றும் கருத்துக்கணிப்பில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விவாதம் பாதியில் கைவிடப்பட, கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு, அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பொதுமக்களின் பிரச்சனைகள் மீது அதிக அக்கறை கொண்டவர் லிஸ் டிரஸ் என 38% கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளனர்.

பொதுமக்கள் நலனில் அக்கறை... கருத்துக்கணிப்பில் மீண்டும் ரிஷி சுனக் சறுக்கல் | Public Concerns Truss More In Touch

ஆனால் 18% உறுப்பினர்கள் மட்டுமே ரிஷி சுனக்கை தெரிவு செய்துள்ளனர். மேலும் வரி குறைப்புக்கு ஆதரவாக 44% கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
அரசாங்கம் மக்களுக்காக செலவிடும் தொகையை அதிகரிக்க வேண்டும் என 22% பேர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு கேள்வியாக பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு, பொதுமக்களில் 41% பேர்கள் ரிஷி சுனக் ஆதரவாகவும் 33% மக்கள் லிஸ் டிரஸ் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

பொதுமக்கள் நலனில் அக்கறை... கருத்துக்கணிப்பில் மீண்டும் ரிஷி சுனக் சறுக்கல் | Public Concerns Truss More In Touch

இதில் தொழிலாளர் கட்சி தலைவர் Sir Keir Starmer 38% ஆதரவுடன் இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.
முன்னதாக எரிசக்தி கட்டணத்தின் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைப்பதாக ரிஷி சுனக் வாக்குறுதி அளித்திருந்தார்.

இதனால் பிரித்தானிய குடும்பங்கள் ஆண்டுக்கு 156 பவுண்டுகள் வரையில் சேமிக்க முடியும் என கூறப்படுகிறது.
ஆனால் அரசாங்கத்திற்கு 4.3 பில்லியன் பவுண்டுகள் இதனால் இழப்பு ஏற்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலனில் அக்கறை... கருத்துக்கணிப்பில் மீண்டும் ரிஷி சுனக் சறுக்கல் | Public Concerns Truss More In Touch



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.