மர்ஹீம் அஸ்ரப்பின் கனவை நிறைவேற்றினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டுக்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீண்டும் இன்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராக இருந்து மறைந்த மர்ஹும் எம் எச் எம் அஷ்ரப்பின் முயற்சியினால் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டது.

ஒரு பக்கம் வர்த்தக துறைமுகமாகவும் மறுபக்கம் மீன்பிடித் துறைமுகமாகவும் இரு பயன்பாடுகளைக் கொண்டதாக துறைமுகம் அமைக்கப்பட்டது.

காலத்திற்கு காலம் கடலரிப்பு மற்றும் மணல் நிறைதல் போன்ற காலநிலை சவால்களை எதிர்கொண்ட போதும் அதை முறையாக பராமரிப்பதில் இருந்த குறைபாடுகள் காரணமாக துறைமுகப்பகுதியில் மணல் நிறைந்து துறைமுக வாயில் மூடப்பட்டதால் பல வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் இத்துறைமுகத்தை நம்பியிருந்த பலநாள் படகுத் தொழிலை செய்துவந்த கடற்றொழிலாளர்கள் காலநிலைக்கு ஏற்ப தமது படகுகளை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து பாதுகாக்கும் நிலையே இருந்து வந்தது.

அதனால் பல்வேறு நடைமுறை சார்ந்த இடர்களையும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டனர்.

இந்த நிலையில் ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் ஆழப்படுத்தியும் அங்கு கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளையும் செய்து தந்து கடற்றொழிலை நம்பியிருக்கும் குடும்பங்களின் வாழ்க்கையை பாதுகாத்துத் தருமாறும் அத்துடன் இத்துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்கு பெருமளவு வருமானத்தையும் ஈட்ட முடியும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த அமைச்சைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து அயராது எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக ஒலுவில் துறைமுகத்தின் வாயில் பகுதி தேவையான அளவு ஆழமாக்கப்பட்டு இன்று (28) மீண்டும் கடற்றொழிலாளர் பாவனைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒலுவில் துறைமுகத்தை அமைத்த மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் ஒலுவில் துறைமுகத்திற்கு “அஷ்ரப் ஞாபகாரத்த ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்” என்று புதிய பெயர் சூட்டப்பட்டு அமைச்சரினால் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

துறைமுகப்பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கட்டித் தொழிற்சாலை மற்றும் ரின்மீன் தொழிற்சாலை என்பன மீளவும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

படகு திருத்தப்பணிகளை மேற்கொள்ளவும், படகு கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

EPDP News.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.