செஸ் ஒலிம்பியாட்: மகளிர் அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இன்று முறைப்படி போட்டிகள் தொடங்கின. கிழக்கு கடற்கரை சாலையில்  அமைந்திருக்கும் போர் பாயிண்ட்ஸ் பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் அமைக்கப்பட்டிருக்கும் செஸ் ஒலிம்பியாட் அரங்கத்தில் மாலை 3 மணிக்கு போட்டிகள் தொடங்கின. ஓபன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மகளிர் ஏ பிரிவில் இந்திய அணிக்காக விளையாடிய வைஷாலி, தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்ரூபை வீழ்த்தினார். 

மேலும் படிக்க | பிரம்மாண்டமாகத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி

செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்கு விளையாடிய ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். ரோனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை வீழ்த்தினார். இந்திய பி மகளிர் அணி, வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. செஸ் ஒலிம்பியாட் ஓபன் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய வீரர்களான கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா ஆகியோரும் வெற்றியை பதிவு செய்து அசத்தினர். ஓபன் பிரிவில் கலந்து கொண்ட தமிழக இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றி பெற்றார். 

இந்திய சி பிரிவு வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரதியுஷா ஆகியோரும் வெற்றியை பதிவு செய்தனர். ஹாங்காவ் அணி வீராங்கனையை 49-வது நகர்த்தலில் ஈஷா கர்வாடே வென்ற நிலையில் பிரதியுஷாவும் வெற்றி பெற்றார். இந்திய சி பிரிவு மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீராங்கனை நந்திதா சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்தார். இந்திய பி பிரிவு மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள கோம்ஸ் மேரி ஆன், திவ்யாச தேஷ்முக் ஆகியோரும் வெற்றி பெற்றனர். 

மேலும் படிக்க | 44வது செஸ் ஒலிம்பியாட் : ‘தம்பி’ என்ற பெயரின் வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைப்பது என்ன ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.