வாஷிங்டன் சுந்தர் வீசிய மேஜிக் பால் – திகைத்துப்போன பேட்ஸ்மேன்

Washington Sundar: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் தற்போது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பிஸியாக உள்ளார். மீண்டும் தனது ஃபார்மை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்கும் ஆர்வத்தில் இருக்கும் அவர், லங்காஷயர் அணிக்காக முதல் முறையாக கவுண்டி கிரிக்கெட்டில் களமிறங்கியிருக்கிறார். அண்மையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர், கென்ட் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த போட்டியில் அவர் வீடியோ மேஜிக் பந்து ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது. 

மேலும் படிக்க | இப்படி ஒரு ரெக்கார்டா? உலக சாதனை படைத்த இந்திய அணி!

அவர் வீசிய அந்த மேஜிக் பந்து, பேட்ஸ்மேன் தடுக்க முன்வந்தபோதும் துல்லியமாக ஸ்டம்புகளை தகர்ந்து விக்கெட்டை வீழ்த்தியுள்ளது. அந்த பந்து எப்படி சென்று ஸ்டம்பை தாக்கியது என்பதை கென்ட் அணியின் பேட்ஸ்மேன் ஜோர்டான் காக்ஸினால் துளியும் நம்ப முடியவில்லை. ஆப் ஸ்பின் பந்தை வீசுகிறார் வாஷிங்டன் சுந்தர். அதனைக் கணித்த பேட்ஸ்மேன் காக்ஸின், ஃபார்வேர்டாக வந்து தடுக்க முற்படுகிறார். ஆனால், பந்து ஆப் ஸ்டம்புக்கு வெளியே பிட்சாகி, சுழன்று சென்று ஆப் ஸ்டம்பை தகர்க்கிறது. காண்போர் அனைவரையும் இந்த மேஜிக் பந்து வியப்படைய வைத்துள்ளது. 

இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் நிர்வாகமும் வாஷிங்டன் சுந்தரின் இந்த மேஜிக் பந்து  வீடியோவை அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளது. இந்தப் போட்டியிலும் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்ந்து சுந்தர் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். முன்னதாக, முதலில் பேட்டிங் இறங்கிய லங்காஷயர் அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கென்ட் அணி 270 ரன்கள் எடுத்தது, 125 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய லங்காஷயர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 436 ரன்கள் குவித்தது. பின்னர் 127 ரன்களுக்கு கென்ட் அணியை சுருட்டி அபார வெற்றி பெற்றது.

மேலும் படிக்க | ’எங்க ஆட்டம் வேற மாதிரி இருக்கும்’ நிக்கோலஸ் பூரன் இந்திய அணிக்கு எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.